சென்னை - டெல்லி விமானம் ரத்து.. திடீர் இயந்திர கோளாறால் 4 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லவேண்டிய ஏர் இந்தியா விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருந்த நிலையில் இயந்திரக் கோளாறு சரி செய்யப்படாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று காலை 10.05 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 147 பயணிகள் பயணிக்க இருந்தனர்.

டெல்லியில் இருந்து காலை 9 மணிக்கு வழக்கமாக வரும் ஏர் இந்தியா விமானம் மீண்டும் காலை 10:05 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும். பயணிகள் அனைவரும் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
டெல்லியில் இருந்து விமானத்தை இயக்கி வந்த பைலட், விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்த பின்பு, மீண்டும் விமானத்தை இயக்கும்படியும் குறிப்பு எழுதி வைத்துச் சென்றுவிட்டார். இதன் காரணமாக, விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டதும் கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக கோளாறு சரி செய்யப்படவில்லை. சென்னை டூ டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு சரி செய்யப்படாததால், விமானம் ரத்து செய்யப்படுவதாக மதியம் 2 மணிக்கு அறிவித்தனர்.
பயணிகளை மாற்று விமானங்கள் மூலம், டெல்லிக்கு அனுப்பி வைக்க விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்தனர். பலர் மாற்று விமானங்களில் டெல்லி செல்ல டிக்கெட் வழங்கப்பட்டது. சில பயணிகள் பயணத்தையே ரத்து செய்துவிட்டு, டிக்கெட் கட்டணங்களை திரும்பப் பெற்றனர். கனெக்டிங் விமானம் மூலம் டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் பரிதவித்ததால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications