நல்லா மழ மழன்னு... ரவுண்டு ரவுண்டா.. கூடவே சில்லியை வச்சு.. எத்தனை நாளாச்சு.. ஒரு கதறல் ஆடியோ
சென்னை: நல்லா மழமழன்னு, ரவுண்டு ரவுண்டா.. கூடவே சில்லியை வச்சு .. எத்தனை நாளாச்சு என ஒரு கதறல் ஆடியோ வெளியாகியுள்ளது. இதை பார்த்தால் யாருக்கும் கவலையடைய தோன்றவில்லை என்பதுதான் இந்த ஆடியோவின் ஹைலைட்டே!
Recommended Video
ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள் இருக்கும் மக்கள் பல்வேறு வகைகளில் பொழுதை கழித்து வருகிறார்கள். சிலர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள். இன்னும் சிலர் இந்த வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு டிக்டாக் உள்ளிட்டவைகளில் வீடியோ போட்டு வருகிறார்கள்.
கொரோனா தாக்கத்தால் வீட்டோடு முடங்கிக் கிடக்கும் நிலையில் பலரும் இப்படித்தான் ஜாலியாக வீடியோ, ஆடியோ என்று பொழுதைக் கழிக்கின்றனர். மனசை உற்சாகப்படுத்திக் கொள்ள இதுவும் ஒரு நல்ல வழிதான்.

வீடியோ
இதுபோன்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களில் உலவுகின்றன. மேலும் தற்போது சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டதால் மக்கள் டிவிகளில் நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவைகளில் படம் பார்த்தும் பொழுதை கழிக்கிறார்கள். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

ஆடியோ
ஆரம்பிக்கும் போது மிகவும் சீரியஸாக ஆரம்பிக்கும் இந்த ஆடியோ கடைசியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் அந்த நபர் கூறுகையில் வணக்கம் நண்பர்களே, நான் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச வந்துள்ளேன். இப்படி சொல்லும் போதே சிலர் ஆடியோவை கட் செய்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

வித்தியாசம்
இன்னும் சிலர் என்னடா இது என நினைப்பார்கள். ஆனால் இது கொஞ்சம் ஸ்பெஷல். சரியா. ஒரு நிமிடம் எனக்காக நீங்கள் கேளுங்கள். வழக்கமாக நீங்கள் கேட்டதுதான். புரோட்டாவை பற்றியதுதான். மைதா மாவினால் தயாரிக்கப்படுவது என்பன உள்ளிட்ட நிறைய விஷயங்கள் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் சொல்றது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

புரோட்டா
எப்படினு பார்த்தீங்கன்னா, இந்த புரோட்டாவுக்கு சிலர் சில்லி சிக்கன், பீப் சில்லி ஆகியவற்றை தொட்டு சாப்பிடுவார்கள். நான் கூட அப்படித்தான் சாப்பிடுவேன். டேஸ்ட் நன்றாக இருக்கும். இதற்கு பெரிய வெங்காயத்தையும் கட் செய்து அந்த சில்லியோட சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். கூடவே லெமனை பிழிந்து விட்டு நாம் சாப்பிட்டிருப்போம்.

டேஸ்டே
அப்படி சாப்பிடும் போது அந்த டேஸ்டே தனிதான். அது கூட புரோட்டா வச்சி சாப்பிட்டிருப்போம் என்கிறார். சரி இனி இந்த புரோட்டாவை இப்படி சாப்பிடக் கூடாது என கூறுகிறாரோ என்ற அச்சத்தில் ஆடியோவை கேட்டால் சிரிப்பு சிரிப்பா வருகிறது. ஆனால் அவர் மட்டும் "அழுகிறார்" . இனி அந்த புரோட்டாவுடன் சில்லி, வெங்காயம், லெமனை பிழிந்து சாப்பிடும் போது தயவுசெய்து என்னைய கூப்பிடுங்க. புரோட்டா சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு. எனக்கு சாப்பிடனும் போல தோணுது என வீடியோவை முடிக்கிறார். இந்த ஆடியோவை சீரியஸாக கேட்டவர் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications