Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலில் ஆரஞ்ச் கலரில் அது பாட்டுக்கு போகுது.. வியப்பூட்டிய கொஸ்டாரிகா ஆரஞ்ச் சுறா! மலைத்த எக்ஸ்பர்ட்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதுமே மீன்களை பற்றின ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன.. மீன்களுக்கு உணர்வுகளே கிடையாது என்று விஞ்ஞானிகள் மறுத்து வந்த நிலையில், கடந்த 25 வருடங்களாகவே, தொட்டி மீன்களின் நடத்தை பற்றி ஆராய்ந்து வரும் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த உயிரினங்கள் உணர்வுப்பூர்வமாக வாழ்கின்றன என்று உறுதியாக சொல்லி வருகிறார்கள்.. இப்படி நாளுக்கு நாள் மீன்களின் சிந்தனைகள், அவைகளின் சமூக, வாழ்வியல் முறைகளை பற்றின ஆய்வுகள் நடந்தபடியே உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஆரஞ்சு சுறா உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. அதென்ன ஆரஞ்சு சுறா?

கொஸ்டாரிகா கடற்கரையில் உள்ளது டோர்டுகுரோ தேசிய பூங்கா.. இந்த பூங்காவுக்கு பக்கத்தில், ஆரஞ்சு நிறத்தில் சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இப்படியொரு கலரில் சுறா, உலகத்தில் வேறு எங்குமே கிடையாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Orange Colour Shark costarica Orange Shark

ஆரஞ்சு நிற சுறா

சம்பவத்தன்று, பூங்காவுக்கு அருகே 37 மீட்டர் ஆழத்தில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தார்களாம்.. அப்போதுதான், சுமார் 6 அடி நீளம் கொண்ட ஆரஞ்சு சுறாவை கண்டுபிடித்திருக்கிறார்கள்.. 31.2 டிகிரி வெப்பநிலையில் இருந்தபோது, இந்த அபூர்வமான சுறாவைக் கண்டுபிடித்து, போட்டோ, வீடியோக்களையும் எடுத்துள்ளனர்,. அதுதான் தற்போது சோஷியல்மீடியாவில் ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.

வழக்கமாக பழுப்பு நிறத்தில் காணப்படும் சுறாக்கள், எதிரிகளிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, தங்கள் நிறத்தை பயன்படுத்தி மறைந்துகொள்ளும்.

வித்தியாசமான கலர்புல் சுறா

ஆனால், சுறாவின் இந்த ஆரஞ்சு நிறத்துக்கு காரணம், உடலிலுள்ள தோலின் நிறத்தில் கருமையான நிறமிகள் குறையும்போது இப்படி ஆரஞ்சு கலரில் தோல் மாறிவிடுமாம்.. சில சமயம் மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களும் வரக்கூடும்.. அல்பினிசம் என்ற மரபணு குறைபாடு காரணமாகவே இந்த நிறம் சுறாவுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால், ஆரஞ்சு கலரில் காணப்படும்போது, சுறாவின் வெண்மையான கண்கள், இன்னும் பிரகாசமாக தெரிகிறதாம்..

ரியோ கிராண்டே ஃபெடரல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து சொல்லும்போது, "இந்த நிறத்தை சான்திசம் (xanthism) என்பார்கள்.. இது அதிகப்படியான மஞ்சள் அல்லது பொன் நிறத்தை ஏற்படுத்துகிறது.

மஞ்சள் நிற பாம்பு, பல்லி

சான்திசம் என்றால் சிவப்பு நிறமி இல்லாததால் ஏற்படும் குறைபாடாகும். சிலசமயம், உணவு போன்ற சுற்றுச்சூழல் காரணங்களுக்காகவும் இப்படி நிறம் மாறலாம்.. எனினும், இந்த ஆரஞ்சு நிறத்துக்கு உறுதியான காரணம் தெரியவில்லை..

ஏற்கனவே மஞ்சள் நிற மீன்கள், பொன் நிற இறகுகள் கொண்ட கிளிகள், சில மஞ்சள் நிற பாம்புகள், பொன்னிற பல்லிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றாலும், கரீபியன் பகுதியில், இப்படியொரு மீனை யாருமே பார்த்ததில்லை..

இந்த அசாதாரண நிறத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. சான்திசம் பொதுவாக மரபணு மாற்றத்தால் ஏற்படும் என்றாலும், இந்த ஆரஞ்சு சுறாவுக்கு வெள்ளை கண்கள் உள்ளன..

ஆழ்கடலின் மர்மங்கள்

சாதாரணமாக இத்தகைய மரபணு மாற்றம் கொண்ட உயிரினங்கள் வேட்டையாடிகளால் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழக்க வாய்ப்பு அதிகம் உண்டு. ஆனால் இந்த சுறா வளர்ந்த பருவம் வரை உயிர் வாழ்ந்திருப்பது வியப்பை தந்து கொண்டிருக்கிறது.. இது புதிய ஆராய்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது. அதன் கோட்பாட்டை மறுபரிசீலனை செய்ய தூண்டிவிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆரஞ்சு நிற மீன்களின் முழு ஆய்வு குறித்து, 'மரைன் பயோடைவர்சிட்டி' என்ற இதழில் விரிவாகவே கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.. மொத்த்தில் இயற்கையின் அதிசயங்கள், அதிலும் ஆழ் கடலின் மர்மங்கள் என்றுமே புதிராகவே இருந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+