CAA அன்றும் இன்றும்; ட்ரோல் ஆகும் எடப்பாடி வீடியோ! உற்சாகத்தில் உடன்பிறப்புகள்
சென்னை: சிஏஏ சட்டம் மற்றி எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோவை திமுகவினர் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
பாஜக மத்திய அரசு கடந்த 2019இல் கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டில் இஸ்லாமியக் கட்சிகள் கடும் போராட்டங்களை நடத்தின. அதில் திமுகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சியின் ஆதரவாளர்கள் வீடுகளில் கோலம் போட்டு சிஏஏ மற்றும் என்.ஆர்.சி சட்டங்கள் வேண்டாம் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதனை ஆதரித்தது அதிமுக. அதற்கு எடப்பாடி பழனிசாமி இப்போது, "கூட்டணியிலிருந்ததால் அதன் தர்மத்திற்கு உட்பட்டு, எங்களுக்கு உடன்படாத சிலவற்றையும் நிறைவேற்ற வேண்டிய நிலையிலிருந்தோம். அந்த அடிப்படையில்தான் சிஏஏவை ஆதரித்தோம்" என்று புதிய விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.
கடந்த சில நாள்கள் முன்னதாக மதுரையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் சிஏஏ சட்டத்தை ஆதரித்ததற்கு ஒபிஎஸ் அழுத்தம்தான் காரணம் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். அந்தப் பேச்சையும் முன்பு ஆட்சியிலிருந்தபோது பேசிய வீடியோவை இணைத்துப் போட்டு இப்போது திமுகவினர் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பலர் வடிவேலு பணியில் 'அது போன மாசம், இது இந்த மாசம்' என்று மீம்ஸ் வெளியிட்டும் வருகின்றனர்.
அன்று எடிப்பாடி பேசியது என்ன? இன்று பேசியது என்ன?

அன்று:
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 18.02.2020 அன்று பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது அவர் பேசியதில், "இதையே சொல்லிச் சொல்லி நாட்டு மக்களை நீங்கள் (திமுக) ஏமாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள். இதனால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் சொல்லுங்கள்? நாங்கள் தீர்வு தருகிறோம்.
தமிழ்நாட்டில் வாழ்கின்ற, தமிழ் மண்ணில் பிறந்த எந்தச் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுங்கள், நாங்கள் அதற்குப் பதில் சொல்கிறோம். யார் பாதித்துள்ளார்கள் சொல்லுங்கள், நானே அதற்குப் பதில் சொல்கிறேன்.
அதைவிட்டுவிட்டு மக்களை ஏமாற்றி, நாடகமாடி தவறான அவதூறான செய்திகளைச் சொல்லி, இன்றைக்கு அமைதியாக மக்கள் வாழ்ந்துவரும் மாநிலத்தில் குந்தகம் வரும் நிலையை ஏற்படுத்தி வருகிறீர்கள்" என்று அதில் பேசி இருக்கிறார்.

இன்று:
அதாவது 06.01.2024 அன்று எஸ்டிபிஐ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மை மக்களை அரண் போல் காக்கின்ற கட்சி.
அதிமுக 30 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்துள்ளது. இந்தக் காலத்தில் மதச் சண்டை கிடையாது. ஜாதிச் சண்டைக் கிடையாது. இரும்புக்கரம் கொண்டு வன்முறை யை அடக்கி உள்ளோம்.
மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுக. எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல அதிமுக. அந்தந்த மதம் அவரவர்களுக்குப் புனிதமானது. அப்படித்தான் எங்கள் தலைவர்கள் வழிகாட்டினார்கள். அந்த வழியில்தான் நாங்கள் செல்கிறோம்.
இங்கு சிஏஏ பற்றிப் பேசினார்கள். அப்போது நான் முதலமைச்சராக இருந்தேன். எவ்வளவு இக்கட்டான காலகட்டம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 4 பேர்தான் அதிகம். அந்த 4.5 ஆண்டுகள் நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இப்போது வெளியில் ஒருவர் சென்றுள்ளார் இல்லையா? அவரை வைத்துக்கொண்டு நான் காலத்தை ஓட்டவேண்டியதாக இருந்தது. நான் எதிர்த்து ஓட்டுப் போட்டிருந்தால் ஆட்சி இருக்காது என்று சொன்னார். அவர் எதிர்த்து ஓட்டுப் போட்ட பிறகும் அண்ணா திமுக ஆட்சி இருந்தது. அதை மறந்துவிட்டுப் பேசுகிறார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும்.
இப்படிப்பட்டவர்களை எல்லாம் வைத்துக்கொண்டுதான் 4.5 ஆண்டுகள் ஆட்சி செய்தேன். அம்மா உருவாக்கிய அரசைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் சகித்துக்கொண்டிருந்தோம். பல் வேறு பிரச்சினைகள். கொஞ்சம் நஞ்சம் அல்ல. அவ்வளவு பிரச்சினைகளைச் சமாளித்துக்கொண்டிருந்தோம்" என்று பேசி இருக்கிறார்
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications