கோயம்பேடு விடுதியில் இளைஞருடன் உல்லாசம்.. தங்க நகைக்கு ஆசைப்பட்ட பெண்ணுக்கு மறக்க முடியாத சம்பவம்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள விடுதி ஒன்றில் விருகம்பாக்கத்தை சேர்ந்த பெண்ணிடம் நகை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த விடுதியில் தனது தாய் என கூறி அறை எடுத்து தாங்கிய வாலிபர், அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க தாலி மற்றும் கம்மல் என மொத்த நகைகளையும் ஏமாற்றி பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.. இதுபற்றி பார்ப்போம்.
சென்னையில் கவனமாக இல்லாவிட்டால் போட்டிருக்கும் பேண்ட், சட்டையை கூட உருவிவிட்டு அனுப்புவார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில் நடிகர் விவேக் ரன் திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். சென்னைக்கு வருவோரை இங்குள்ள சிலர் எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள்.. எப்படி எல்லாம் சென்னைக்கு வருபவர்கள் ஏமாறுவார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் இருக்கும். அதைஅப்படியே நிரூபிக்கும் வகையில் தான் இன்றும் பல சம்பவங்கள் நடக்கின்றன.

சென்னைக்கு முதல் முதலாக வந்த பலர் ஏமாந்துள்ளார்கள். சென்னைக்கு முதல் முறையாக வந்தவர்கள் மட்டுமல்ல.. சென்னையிலேயே பல வருடம் வசித்து வருபவர்களும், திருடர்களிடம் நூதனமாக ஏமாந்து வருகிறார்கள். சென்னையில் ஒரு பெண் வித்தியாசமான முறையில் ஏமாந்துள்ளார்.. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 47 வயது பெண் அந்த பகுதியில் கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விருகம்பாக்கம், சாய் நகர் மார்க்கெட் அருகே வேலைக்காக காத்திருந்தாராம். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் டிப்-டாபாக வந்த இளைஞர், அவரிடம் நைசாக பேச்சு கொடுத்து பைக்கில் ஏற்றி சென்றாராம்.
பின்னர் கோயம்பேடு, பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். விடுதி ஊழியர்களிடம் அப்பெண்ணை தனது தாய் என கூறி அறை எடுத்த வாலிபர் தாங்கியதுடன், அவருடன் உல்லாசம் அனுபவித்தாராம். தொடர்ந்து அந்த பெண்ணிடம் உனக்கு நகை வாங்கி தருகிறேன் என கூறி அறையை காலி செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்னை தி.நகருக்கு அழைத்து சென்றாராம்.
அந்த பெண் அணிந்து இருந்த 1 பவுன் கம்மல் மற்றும் 2 பவுன் தங்க தாலியை வாங்கிய இளைஞர், பின்னர் தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றாராம். நீண்ட நேரம் ஆகியும் வராததால் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்து அந்த பெண் செல்போனில் அந்த வாலிபரை தொடர்பு கொண்டு நகைகளை கேட்டுள்ளார். ஆனால் நகைகளை திருப்பி தருவதாக கூறிய அந்த இளைஞர் நகையோடு எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதியில் அந்த வாலிபர் கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் அவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த எட்வின் ஷான் (வயது 32) தெரிய வந்தது. அவர் உண்மையான ஆதாரங்களை கொடுத்தாரா அல்லது போலியான அவணங்கள் மூலம் லாட்ஜில் அறை எடுத்து, இதேபோல் வேறு பெண்களிடம் மோசடிகளில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications