அதிர விடும் சென்னை புது கமிஷ்னர் அருண்.. அதுவும் புதுசா போட்ட உத்தரவு இருக்கே! ரவுடியிசத்துக்கு செக்
சென்னை: சென்னையில் ரவுடியிசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு மிக முக்கியமான உத்தரவு ஒன்றை சென்னை புது கமிஷ்னர் அருண் வெளியிட்டு உள்ளார்.
சென்னை புது கமிஷ்னராக அருண் பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி ஆக்சன்களை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக கடந்த 1 வாரத்தில் சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 81 குற்றவாளிகளை நேரடியாக தணிக்கை செய்து 77 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.A.அருண், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா நகரமாக மாற்ற 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர் கைது: இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சென்னையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் இதர குற்றவாளிகளுக்கு எதிராக 14.07.2024 மற்றும் 15.07.2024 ஆகிய 2 நாட்கள் தீவிர தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு (DARE) எதிரான இந்த சிறப்பு சோதனையில் R-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஐயப்பன், வ/33, த/பெ.மணி. S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் டேனியல் ஜோசப், /24, த/பெ.சதீஷ்குமார் மற்றும் நவீன்குமார், வ/25, த/பெ.கண்ணன், S-9 பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் அருண், வ/23, த/பெ.அசோக். D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கலைமணி, வ/30, த/பெ.சுப்பிரமணி, F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் சஞ்சய், வ/24, த/பெ.தர்காமோகன், J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நெல்சன், வ/47, த/பெ.பொன்னப்பன் ஆகிய குற்றவாளிகள் உட்பட 77 சரித்திரப் பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதர 04 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை நேரில் சென்று விசாரித்தும் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்தி எச்சரிக்கப்பட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் தலைமறைவாகயிருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
எச்சரிக்கை: ஆகவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணி நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இது போக குறைந்தபட்சம் தினமும் இரண்டு ரவுடிகள் என்ற அடிப்படையில், ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும். இதற்காக சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் அருண் உத்தரவிட்டு உள்ளார்.
தற்போது ஹிஸ்டரி ஷீட்டர் லிஸ்ட்ல இருக்கும் ரவுடிகள் எச்சரிக்கப்படுகிறார்கள். ரவுடிகளின் உறவினர்களுக்கு அறிவுரை தர வேண்டும். அவர்கள் ஏதாவது சிறிய தவறு செய்தாலும் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும்.. ஜாமீனில் இருப்பவர்கள் தவறு செய்ய யோசித்தால் கூட அவர்கள் மீது ஆக்சன் எடுக்கப்பட்டு ஜாமீன் நீக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications