70-80 பேர் கூட இல்லை சாரே.. அதிமுக கூட்டணிதான் ஒரே வழி.. விஜயை நெறுக்கும் ஆலோசகர்கள்..என்னாச்சு?
சென்னை: வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய்யை சில அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். விஜயிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரஷர் போட்டு வருவதாக கூறப்படுகிறது. அனைத்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவதில் சிக்கல் உள்ளது.. இதனால் கட்சி பணிகளுக்கு சவால் ஏற்படக்கூடும் என்று அவர்கள் வறுபுறுத்துகின்றனர்..
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கும் (TVK), எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் (AIADMK) இடையே புதிய அரசியல் மோதல் உருவாகியுள்ளது. விஜயை கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார்.. ஆனால் தவெக பிடிகொடுக்காமல் தொடர்ந்து விலகி சென்றபடி இருக்கிறது.

விஜய்க்கு பறக்கும் அட்வைஸ்
வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய்யை சில அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது தவெகவிடம் சுமார் எழுபது முதல் எண்பது வலுவான வேட்பாளர்கள் மட்டுமே இருப்பதாகவும், பல தொகுதிகளில் இன்னும் தகுதியான அல்லது அனுபவமிக்க நபர்கள் இல்லை என்றும் இந்த அரசியல் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போதுமான தரமான வேட்பாளர்கள் இல்லாமல் முழு மாநில பிரச்சாரத்தை மேற்கொள்வது கட்சிக்கு பாதகமாக அமையலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தவெக போன்ற புதிய கட்சிக்கு வலுவான களப்பணி, பிரபலமான முகங்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் அனுபவமுள்ள அமைப்பாளர்கள் தேவை. இவை இல்லாமல், கட்சி தனது வளர்ந்து வரும் பிரபலத்தை வாக்குகளாக மாற்ற முடியாமல் தடுமாறலாம் என்று அஞ்சப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி முக்கியம்
அதிமுக மற்றும் பாஜக போன்ற நிறுவப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தவெகவிற்கு ஒரு பரந்த ஆதரவு அமைப்பிற்கு உடனடியாக வழிவகுக்கும் என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இத்தகைய கூட்டணி, ஒரு புதிய கட்சி பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் கிரவுண்டு வேலை, பூத் லெவல் ஊழியர்கள் மற்றும் தேர்தல் வியூகங்களை வழங்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இது தவெக பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்த உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர். இருப்பினும், இந்த ஆலோசனைகள் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுக உடன் நின்றால் 80 சீட்டு வரை கிடைக்கும்.. உங்களிடம் அதற்கான வேட்பாளர்கள் இருப்பார்கள். துணை முதல்வர் பதவியும் கிடைக்கும். என்ன நினைக்கிறீர்கள்? என்று விஜயிடம் அரசியல் ஆலோசகர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச தொடங்கி உள்ளார்களாம். ஆனால் தவெக கட்சியின் உள்வட்டாரத் தகவல்களின்படி, அதிமுக உடன் தொடர்ச்சியான அணுகுமுறைகள், பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், அதிமுகவுடனோ அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனோ (NDA) கூட்டணி வைக்கப் போவதில்லை என்று விஜய் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் உறுதியாக இருக்கிறார்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தனது நீண்டகால அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று விஜய் நம்புவதாகக் கூறப்படுகிறது. சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவை இழக்க நேரிடும் என்று அவர் கவலைப்படுவதாக தமிழக வெற்றி கழகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விஜய்யை மாற்றத்தின் அடையாளமாகப் பார்க்கும் இளம் வாக்காளர்கள், ஏற்கனவே உள்ள பழைய அரசியல் கட்சிகளுடன் அவர் கைகோர்த்தால், இளைஞர்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறலாம் என்றும் விஜய் கருதுகிறார் என்று கூறப்படுகிறது.
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications