கொசுவை கொல்லும் நவீன இயந்திரம்.. அசந்து போன ஆனந்த் மகிந்திரா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
டெல்லி: ஏவுகணைகளை தாக்கி அழிக்கக்கூடிய அயர்ன் டோம் தொழில் நுட்பம் போல செயல்பட்டு, கொசுக்களை தாக்கி அழிக்கக் கூடிய கருவி ஒன்றின் வீடியோவை ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். உங்கள் வீட்டிற்கான அயர்ன் டோம் என குறிப்பிட்டு இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனால் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்ளில் மிகவும் ஆக்டிவாக இயங்கக் கூடியவர். வாகன உற்பத்தி, ஐடி என இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் மகேந்திரா குழுமங்களின் தலைவராக இருக்கும் ஆனந்த் மகிந்திரா, தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் சுவாரசியமாக பதிவிட்டு வருகிறார்.

தனக்கு பிடித்த விஷயங்கள், தன்னை வியக்க வைத்த நிகழ்வுகள், எளிய பின்னணியில் இருந்து சிகரம் தொட்ட நபர்களை பற்றிய விவரம், நகைச்சுவை துணுக்குகள் என தனது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவுகளை போட்டு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே வைத்து இருக்கிறார் ஆனந்த் மகிந்திரா. எக்ஸ் தளத்தில் மட்டும் இவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றி வருகிறார்கள்.
ஆனந்த் மகிந்திராவின் பதிவு எல்லாமே கிட்டத்தட்ட சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்துவிடும். இந்த நிலையில், தான் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஏவுகணைகளை தாக்கி அழிக்கக்கூடிய அயர்ன் டோம் தொழில் நுட்பம் போல செயல்பட்டு, கொசுக்களை தாக்கி அழிக்கக் கூடிய கருவி ஒன்றின் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.
With dengue on the rise in Mumbai, I’m trying to figure out how to acquire this miniature cannon, invented by a Chinese man, which can seek out & destroy mosquitoes!
— anand mahindra (@anandmahindra) August 24, 2024
An Iron Dome for your Home…
pic.twitter.com/js8sOdmDsd
உங்கள் வீட்டிற்கான அயர்ன் டோம் என குறிப்பிட்டு இருக்கும் ஆனந்த மகிந்திரா, மும்பையில் டெங்கு கொசு பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்து இருக்கும் இந்த மினியேச்சர் பீரங்கியை எப்படி வாங்குவது என கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். இந்த மெஷின், கொசுவை தேடிப்பிடித்து அழிக்க கூடியது. உங்கள் வீட்டில் இருக்கும் அயர்ன் டோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
சீனாவின் வெய்போ சமூக வலைத்தளத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே, இந்த வீடியோ வைரலானது. தற்போது, ஆனந்த் மகிந்திரா பதிவிட்ட நிலையில் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த கருவி குறித்து சுவாரசியமாக பதிவிட்டு வருகிறார்கள். கொசுவை கொல்லும் நவீன இயந்திரம் என்றும், சீனா எப்போதுமே புதுமையாக கண்டுபிடிப்பதில் வியக்க வைக்கிறது எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
அதேபோல சில நெட்டிசன்கள் கூறுகையில், "இதன் விலை எவ்வளவு என்றும்? எங்கே வாங்குவது" எனவும் ஜாலியாக பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல இந்த கருவி எவ்வளவு நேரம் இடைவிடாது இயங்கும், எவ்வளவு தொலைவில் உள்ள கொசுக்களை வரை அழிக்கக் கூடியது என விஞ்ஞான ரீதியாகவும் சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.
கொசுவால் கொடூரமாக பாதிக்கப்பட்ட நபர்தான் இதை கண்டுபிடித்து இருக்க வேண்டும் என்றும் சில நெட்டிசன்கள் கலகலப்பாக பதிவிட்டுள்ளனர். ஆனந்த் மகிந்திராவின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சீனாவை சேர்ந்த என்ஜினியர் ஒருவர் இந்த கருவியை கண்டுபிடித்ததாகவும், கொசுவை கண்டறியும் விதமாக மின்சார காரில் ரேடாரை உருவாக்கி, லேசர் பாயிண்ட் மூலம் கொசுவை அழிக்கும் விதமாக வடிவமைத்துள்ளதாகவும் பிரேசில் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications