"பால்லா அதுவும் ஃபார்முலா ஒன் ரேஸ் காரிலா".. இவரை பார்க்கணும் போல இருக்கு.. பூரித்த ஆனந்த் மகிந்திரா
சென்னை: வீடு வீடாக பால் விநியோகம் செய்ய ஒருவர் வினோதமான வாகனத்தை பயன்படுத்தி வருவது குறித்து ஆனந்த் மகிந்திரா பாராட்டியுள்ளார்.
Recommended Video
மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனணந்த் மகிந்திரா. 69 வயதான இவர் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருப்பவர். எந்த ஒரு சிறிய விஷயமானாலும் அவரை இன்ப்ரஸ் செய்துவிட்டால் பாராட்டாமல் இருக்க மாட்டார்.
கொல்லிமலையின் சாலை, சேக்குவே வாகனத்தை போல் சைக்கிளை பயன்படுத்திய இளைஞர், வீணான பாகங்களை வைத்து சிறிய வண்டியை தயாரித்த நபர், சூப்பராக ஓவியம் வரையும் சென்னை கலைஞர் என்பது குறித்து வீடியோக்களை பதிவிட்டிருந்தார்.

அசாத்திய திறமை
அத்துடன் அந்த நபர்களின் அசாத்திய திறமைகளையும் பாராட்டியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வெளியிட்ட மூப்பில்லா தமிழே தாயே இசை ஆல்பத்தையும் ஆனந்த் மகிந்திரா பார்வையிட்டு பாராட்டியுள்ளார். அதிலும் தனது நிறுவனத்தின் ஜாவா பைக்குகள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளதால் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

வாகன உற்பத்தி
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனத்தை வைத்திருக்கும் ஆனந்த் மகிந்திரா, வித்தியாசமான வாகனங்களை கண்டால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல் மகிழ்ச்சியாக இருக்கும். அதை பாராட்டாமல் இருக்கவே மாட்டார். அந்த வகையில் தற்போது இணையத்தில் சூடு பிடித்து வரும் வினோதமான வாகனத்தை ஆனந்த் பாராட்டியுள்ளார்.

பார்முலா ஒன் கார்
ஒரு வீடியோவில் ஒருவர் பார்முலா ஒன் கார் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் வாகனத்தை போல சொந்தமாக ஒரு வாகனத்தை டிசைன் செய்து அதன் மூலம் பால் விநியோகம் செய்து வருகிறார். 3 சக்கரங்களை கொண்ட அந்த வாகனத்தை ஹெல்மெட் அணிந்து கொண்டு அந்த நபர் இயக்குகிறார்.

ஆனந்த் மகிந்திரா பாராட்டு
இந்த வீடியோ தீயாய் பரவிய நிலையில் இது ஆனந்த் மகிந்திராவின் கண்களிலும் பட்டது. உடன அவர் கூறுகையில், அவருடைய வாகனம் சாலை விதிமுறைகளை பூர்த்தி செய்கிறதா என எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால் சக்கரங்கள் மீதான அவரது ஆர்வம் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என நம்புகிறேன். நீண்ட காலமாக நான் பார்த்தவற்றில் சிறந்த விஷயம் இது. நான் இந்த சாலை போராளியை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications