"சட்டென சரிந்த தங்கம் விலை.." காரணம் என்ன? அடுத்து விலை எந்தளவு உயரும்! ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களாக திடீரென குறைந்தது.. இதற்கான காரணத்தை விளக்கிய ஆனந்த் சீனிவாசன்.. தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை கடந்த சில காலமாகவே மெல்லக் குறைந்து வந்தது. இருப்பினும், கடந்த வாரம் அது சட்டென அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாகக் கடந்த மே 20ஆம் தேதி இதுவரை 6900 ரூபாயைத் தொட்டது.

இருப்பினும், அதன் பிறகு தங்கம் விலை சட்டெனக் குறைந்த நிலையில், நேற்று மே 24ஆம் தேதி சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனந்த் சீனிவாசன்: அதாவது தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.200 ரூபாய் வரை குறைந்துள்ளது. தங்கம் விலை சட்டென இந்தளவுக்குக் குறைந்தது ஏன்.. வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு 22 கேரட் தங்கம் ரூ. 6900ஐ தாண்டியது. அதேபோல 24 கேரட் தங்கம் 7500ஐ தாண்டியது. தங்கம் விலை இவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கலாமா எனப் பேச்சு எழுந்ததற்கே இந்தளவுக்குத் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதேநேரம் அவர்கள் வட்டி விகிதத்தை அதிகரித்தால் தங்கம் எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பதை யோசனை செய்து பாருங்கள்.
தங்கம் விலை: அமெரிக்க மத்திய வங்கி செப். மாதமே வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்ற தகவல் வெளியானதே இதற்குக் காரணம். டாலர் மதிப்பு குறைந்துள்ளது.. மேலும், ஈரான் விவகாரம் உள்ளிட்ட பல சர்வதேச அரசியல் நிகழ்வுகளும் தங்கம் விலை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. வரும் காலத்தில் நிச்சயம் தங்கம் விலை அதிகரிக்கும்" என்றார்.
அதேபோல இப்போது கடந்த 2 நாட்களாகத் தங்கம் விலை ஏன் குறைந்துள்ளது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் மற்றொரு வீடியோவில் கூறுகையில், "அமெரிக்க மத்திய வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் என்ன விவாதித்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் சிலர் வட்டியை மேலும் அதிகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். எனவே, இப்போதைக்கு வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இல்லை.
டாலர் மதிப்பு: இந்தத் தகவல் வெளியான உடனேயே டாலர் மதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாகவே தங்கம் விலை குறைந்தது. எனவே, தங்கம் வாங்க நினைப்பவர்கள் தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்" என்றார்.
எப்படி இருக்கும்: மேலும், தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை மற்றொரு வீடியோவில் விளக்கிய ஆனந்த் சீனிவாசன், "தங்கத்தை வாங்க மறக்காதீர்கள்.. தங்கம் இங்கிருந்து 15% வரை விலை அதிகரிக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனவே தங்கம் வாங்க மறக்காதீர்கள்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications