மார்க்கெட் விலையைவிட ரொம்ப கம்மியா தங்கம் வாங்கலாம்.. அது எப்படி? சீக்ரெட்டை உடைத்த ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்திற்குப் போய்க் கொண்டு இருக்கிறது. இதனால் பொதுமக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால், மார்க்கெட் விலையை விட 3- 4% வரை குறைந்த விலையில் தங்கத்தை வாங்கலாம்.. அதுவும் சட்டப்பூர்வமாகவே வாங்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அந்த சீக்ரெட்டை தான் இப்போது ஆனந்த் சீனிவாசன் விளக்கியிருக்கிறார்.

தங்கம் விலை ஜெட் வேகத்தில் பாய்ந்து கொண்டு இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10,500ஐ தாண்டி தாறுமாறாக உயர்ந்துவிட்டதால் மக்களால் தங்கம் வாங்கச் சிரமப்படுகிறார்கள். ஆனால், சட்டப்பூர்வமாகவே மார்கெட் ரேட்டை விட குறைந்த விலையில் தங்கம் வாங்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Anand Srinivasan gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

சில நிறுவனங்கள் பழைய தங்கத்தை விற்கிறார்கள். இன்றைய தங்கம் ரேட்டுடன் சேர்த்து 2 அல்லது 3% சேர்த்துக் கொடுத்தால் தங்கத்தைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதுபோன்ற தங்கத்தை வாங்கலாமா என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும் போதுதான் ஆனந்த் சீனிவாசன் மார்க்கெட் ரேட்டை விட குறைவாக வாங்கும் சீக்ரெட்டை விளக்கினார்.

இது தொடர்பாகச் சில நாட்களுக்கு முன்பு அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். முதலில் அந்த நிறுவனங்கள் கையில் தங்கம் எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்... அவர்கள் ஏலத்தில் தங்கத்தை வாங்குவார்கள். (அதாவது நகைக்கடன் வாங்கி அதைக் கட்ட முடியாமல் போனால் அந்த நகை ஏலத்திற்கு வரும். அதை இந்த நிறுவனங்கள் வாங்குகின்றன.)

4% வரை குறைவாகக் கிடைக்கும்

உங்களுக்குத் தெரிந்த யாராவது நகைக்கடனில் மாட்டி இருந்தாலும் கூட அவர்களிடம் இருந்தே 4% வரை குறைந்த விலையில் தங்கத்தை வாங்கலாம். இதுபோல 2-3% குறைவாக வாங்கி அவர்கள் தங்கத்தை விற்பார்கள். இந்த 2-3% வித்தியாசம் தான் அவர்களுக்கு லாபம். ஆனால், இத்தோடு ஜிஎஸ்டி கட்ட வேண்டி இருக்கும்.

நீங்கள் இப்படிப் போய் வாங்குவதற்கு நேரடியாக ஏலத்திலேயே போய் தங்கத்தை வாங்கலாம். ஆனால், நம்ம ஊரில் இதுபோன்ற தங்கத்தைப் பலரும் வாங்க மாட்டார்கள். சென்டிமென்ட் பார்த்தும், ராசி பார்த்தும் தங்கத்தை வாங்க மாட்டார்கள்.

நான் வாங்க மாட்டேன்

நான் வாங்கி இருக்கேனா எனக் கேட்டால்.. நான் வாங்கியதில்லை. மற்றவர்கள் கஷ்டப்பட்டு வேறு வழியில்லாமல் விற்கும் தங்கத்தை நான் வாங்க மாட்டேன். ஆனால், அது எனது தனிப்பட்ட கருத்து. வங்கி மேனேஜர் கடனை க்ளோஸ் செய்யவே பார்ப்பார். எனவே, அவரிடம் சொல்லி வைத்தால் 4% வரை குறைவாகவே தங்கத்தை வாங்கலாம். ஆனால், மற்றவர்கள் வயிற்றெரிச்சல் எனக்கு வேண்டாம் என்பதாலேயே நான் அதை வாங்க மாட்டேன். யாரும் தனது தங்கம் ஏலத்தில் வர வேண்டும் என நினைக்க மாட்டார்கள். எனவே, அப்படிப்பட்ட தங்கம் எனக்கு வேண்டாம்" என்றார்.

பழைய கார் வாங்கலாமா?

அப்போ தங்கத்தை போலவே காரும் தானே சென்டிமென்ட். அப்போ பழைய கார் கூட வாங்கக்கூடாதா என்ற சந்தேகம் சிலருக்கு வரும். அதற்கான பதிலையும் அவர் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், "இப்போது பழைய காருக்கு மதிப்பு இல்லை. 1991க்கு முன்பு, அதன் பிறகு என இரண்டாக நாம் பிரிக்கலாம். 1991க்கு முன்பு வரை தங்கம் ஒரு சொத்தாக இருந்தது. வாங்கிய விலைக்கு மேல் விற்க முடிந்தது.

நான் ஒரு பியாட் காரை ரூ.65,000க்கு வாங்கி ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றேன். ஏனென்றால் அப்போது புதிய கார் தொழிற்சாலைக்கு அனுமதி இல்லை. ஆனால், இப்போது அப்படி இல்லை. பலர் கார் தயாரிக்கிறார்கள்.எனவே, நீங்கள் காரை வாங்கி.. ஷோரூமில் இருந்து வெளியே எடுத்து வந்தாலே அதன் மதிப்பு 50% போய்விடும். எனவே, சொத்தையும் செலவையும் ஒப்பிட முடியாது. தங்கம் என்பது சொத்து பரம்பரை பரம்பரையாகக் கூட வைத்திருப்பார்கள். ஆனால், கார் என்பது சொத்து இல்லை. செலவு என்பதை மறந்துவிடாதீர்கள்" என்றார்

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+