Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது என்ன Emerging new world order? நிர்மலா பேச்சைக் கவனித்தீர்களா? சர்வாதிகாரம் நோக்கி நகர்வா?

Subscribe to Oneindia Tamil

2024 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் உரையின் போது Emerging new world order என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

பலரும் அந்த ஆங்கில வார்த்தையைப் பெரிய அளவில் கவனிக்கவில்லை. ஆனால், அதற்குள் சர்வதேச அரசியலே ஒளிந்துள்ளது. இந்தியா வல்லரசு ஆகும் அளவுக்கு அதற்கு உலகப் பொருளாதார குறியீடு உள்ளது. அதை D code செய்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.

Anand Srinivasan Explains Interim Union Budget 2024

அவர் அந்த வார்த்தைக்குள் உலக நாடுகளில் அரசியல் எந்தளவுக்கு அதிகாரம் செலுத்துகிறது என்பதைப் போட்டு உடைத்துள்ளார். கூடவே சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா நகர்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

"இந்த இடைக்கால பட்ஜெட் மட்டுமல்ல; நிர்மலா சீதாராமனின் ஒட்டுமொத்த நிதி அறிக்கையை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் அதில் தரவுகள் எதுவுமே இருக்காது. முதலில் ஒரு பட்ஜெட்டின் அடிப்படை என்ன? அதில் வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்பதைத் தெளிவாகக் கொடுக்க வேண்டும்.

ஆனால், இந்த அம்மையார் இதுவரை தாக்கல் செய்த எந்த பட்ஜெட்டிலும் வரவு செலவு கணக்கே காட்டப்பட்டு இருக்காது. அதைப்போல இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் வரவு செலவு கணக்கே இல்லை" என்றார்

Anand Srinivasan Explains Interim Union Budget 2024

Emerging new world order என்ற வார்த்தையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் பயன்படுத்தி இருந்தார். அது என்ன Emerging new world order? புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது என்று இதற்குப் பொருள்தரலாம். அது என்ன புது உலக ஒழுங்கு? அதற்கும் விளக்கம் அளித்துள்ளார் ஆனந்த் சீனிவாசன்.

"நிதியமைச்சர் என்ன நினைத்து அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் என்பது எனக்குத் தெரியாது. முதலில் பிரதமர் சொன்னது பற்றி சில விசயங்களை தெளிவுபடுத்தி விடுகிறேன். பிரதமர் De dollarization பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்.

Anand Srinivasan Explains Interim Union Budget 2024

அதாவது அமெரிக்க டாலரை பயன்படுத்தாமல் இந்திய ரூபாயை எல்லா நாடுகளிலும் பயன்படுத்த முடியும் என்பது போலப் பேசி இருக்கிறார். அதற்கு முதலில் யாரைப் பிடித்தார்கள்? ரஷ்யாவைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். ரஷ்யா இனிமே நமது பணத்தை வாங்கிக் கொண்டு கச்சா எண்ணெய்யைக் கொடுப்பார்கள் என்று சொன்னார் மோடி.

ரஷ்யாவும் அதை ஏற்றுக் கொண்டது. ஒரு 20 ஆயிரம் கோடிக்குக் கச்சா எண்ணெய் வாங்கியது இந்தியா.

ரஷ்யாவுக்கு நாம் 20 ஆயிரம் கோடி தரவேண்டும். அல்லது ரஷ்யா நமது நாட்டில் 20 கோடிக்கு ஏதேனும் பொருள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தியாவிலிருந்து ரஷ்யா வாங்கிக் கொள்வதற்கான பொருள் எதுவுமே இல்லை.

Anand Srinivasan Explains Interim Union Budget 2024

கடைசியில் ரஷ்யா என்ன செய்தது தெரியுமா? ரஷ்யா கவர்ன்மெண்ட் பாண்ட்டிலேயே அந்தத் தொகையைப் போட்டு வைத்திருக்கிறது. இப்போது என்ன சொல்லிவிட்டது தெரியுமா?

இனிமேல் ரூபாயை வாங்கிக் கொண்டு கச்சா எண்ணெய் தர முடியாது. டாலரில் பணம் கொடுக்க வேண்டும் என்று ரஷ்யா சொல்லிவிட்டது.

பிரதமர் மோடி என்ன சொன்னார்? De dollarization என்று சொன்னார். ஆனால், ரஷ்யா ரூபாயை வாங்க மறுக்கிறது.

இப்போது கூட நான் துபாய் போனேன். சில நாள்கள் முன்புதான் வந்தேன். அங்கே போகும்போது இந்த முறை மோடி சொன்னதற்காக ரூபாய் எடுத்துக் கொண்டு போனேன். ஹோட்டல்களில் தங்கும் போது இந்தியப் பணத்தைக் கொடுத்தேன். வாங்க மறுத்துவிட்டார்கள். டாலரில் கொடுக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். இதுதான் மோடி சொன்ன De dollarization. இதுதான் Real world order.

முதலில் Real world order பற்றிப் பார்த்துவிடுவோம். உலகம் என்பது இரண்டாகப் பிரிகிறது. ஒரு பக்கத்தில் டர்க்கி, ஹங்கேரி, ரஷ்யா, சீனா இருக்கின்றன. இது Authoritarian liberal society ஆக டெவலப் ஆகிக் கொண்டு வருகிறது.

Anand Srinivasan Explains Interim Union Budget 2024

இங்குள்ள ஆட்சியாளர்கள் எல்லாம் சட்டத்தை தங்களின் இஷ்டத்திற்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தப் பட்டியலில் உள்ள சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் எல்லாம் Illiberal democracy தான் உள்ளது.

மற்றொரு பக்கம் ஒபன் செசைட்டி. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி இவை அந்தப் பட்டியலில் வருகின்றன. அங்கே ட்ரம்ப் அதிபராக நிற்கலாம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் அதிபர் தேர்தலில் நிற்கலாம். இதுதான் ஒபன் சொசைட்டி. ஆக, இவைதான் இரண்டுவிதமான உலகங்கள்.

இந்த world order இல் இந்தியா எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்பது முக்கியம். நாம் சீனா பக்கம் போக முடியாது. அந்த நாடு ஏற்கெனவே 1 லட்சம் ஏக்கரைப் பிடுங்கிக் கொண்டுவிட்டது. சீனாவும் ரஷ்யாவும் நட்பு நாடுகள்.

நமது இந்தியா வருங்காலத்தில் ஒபன் சொசைட்டியை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், மோடி அரசும் அவரது கட்சியும் Authoritarian reign பக்கம் செல்ல நினைக்கிறார்கள். அதாவது சர்வாதிகார ஆட்சிக்கு நகர முயல்கிறார்கள்.

உலகில் உள்ள world order இல் இந்தியா எதை நோக்கிப் பயணிக்க விரும்புகிறது என்பதற்கான பதிலைத்தான் பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜக செய்தது, பீகாரில் செய்தது, சண்டிகரில் நேற்று நடந்தது எனப் பல சம்பங்களை வைத்துப் பார்த்தால், சர்வாதிகாரம் நோக்கித்தான் மோடி அரசு நகர்கிறது என்பது என் கணிப்பு.

ஆனால், இதை எல்லாம் புரியாமல் Emerging new world order என்று நிதியமைச்சர் சொல்கிறார், நாம் பார்த்து வளர்ந்த குட்டி நாடு மாலதீவு. அந்த நாடு நம் துடுப்புகளை அப்புறப்படுத்தச் சொல்லவிட்டது. அதை எதிர்க்க முடியவில்லை இந்தியாவால். இதுதான் Emerging new world order என்று நிதியமைச்சர்தான் விளக்க வேண்டும்.

இனிமேல் Dollarization நாங்கள் தான் என்ற அர்த்தத்தில் நிர்மலா சீதாராமன் Emerging new world order வார்த்தையைப் பயன்படுத்துகிறார். உலகத்தில் உள்ள இரண்டு world order இனி இல்லை. உலகத்திலேயே நாங்கள் பவர் ஆகிவிட்டோம் என்கிறார். அதை நம்புகிறவர்கள் நம்பலாம். நான் நம்பத் தயாராக இல்லை" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+