ஆஹா.. திடீரென குறைந்த தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா? இன்னும் குறையுமா? ஆனந்த் சீனிவாசன் பளிச்
சென்னை: தங்கம் விலை கடந்த இரு நாட்களாக குறைந்து வந்த நிலையில், எதற்காக தங்கம் விலை குறைகிறது என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர் விரிவாக பேசியுள்ளார்.
தங்கம் விலை கடந்த சில காலமாகவே புதிய உச்சத்த்தை தொட்டு வந்தது. நமது நாட்டை பொறுத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்தினரின் முதல் சேமிப்பாக தங்கம் இருக்கிறது. மேலும், திருமணம் உள்ளிட்ட விஷேசங்களிலும் தங்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

இப்படி தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்தால் பொதுமக்கள் கவலையடைந்தனர். இதற்கிடையே கடந்த இரு நாட்களாக தங்கம் விலை ஓரளவுக்கு குறைந்துள்ளது. இது சற்று நிம்மதியை தந்தாலும் வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதில் பொதுமக்களிடையே குழப்பமே இருக்கிறது.
ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே தங்கம் விலை ஏன் குறைந்தது.. வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பதை ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது குறித்து அவர், "தங்கம் விலை நேற்று ரூ.145 குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக தங்கம் விலை இதுவரை 240 ரூபாய் வரை குறைந்துள்ளது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6700 என்ற ரேஞ்சில் இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் கூட தங்கம் விலை குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் இந்திய ரூபாய் மதிப்பும் பெரியளவில் சரியாமல் இருக்கிறது. உலக நாடுகளில் சீனா தங்கத்தை வாங்கி குவித்து வந்தது. இப்போது சீனா தங்கம் வாங்குவதை கொஞ்சம் நிறுத்தி இருக்கும் என நினைக்கிறேன். அதை தவிர தங்கம் விலை குறைய எந்தவொரு காரணமும் இருப்பதாக தெரியவில்லை.
வேறு காரணம் என்ன: அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ, பிரிட்டனின் பவுண்ட், ஜப்பானின் யென் என சர்வதேச நாடுகளின் நாணயங்களின் மதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. இந்த நாடுகளில் வளர்ச்சி குறைந்துள்ளதால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் நாட்டில் வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
இப்படி பவுண்ட், யூரோ, யென் ஆகியவற்றின் மதிப்பு குறைவதாலேயே தங்கம் விலை குறைகிறது என நினைக்கிறேன்.. ஆனால், எந்தளவுக்கு தங்கம் விலை குறையும் என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. இப்போது தங்கம் விலை குறைய ஆரம்பித்துள்ளது. இப்போது தங்கத்தை தேவைப்பட்டால் வாங்கலாம். விலை குறைந்தால் இன்னும் வாங்கலாம்.
விரைவில் அதிகரிக்கும்: ஏனென்றால் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை குறைக்க தொடங்கினால் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கும். இந்தாண்டு ஓரிரு முறை மட்டுமே அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை குறைக்கும் என்றாலும் அடுத்தாண்டு அதிகளவில் வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்தார்.
எந்தளவுக்கு அதிகரிக்கும்: அதேபோல தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் மற்றொரு வீடியோவில், "தங்கத்தை நிச்சயம் வாங்குவது குறித்து பரிசீலனை செய்யுங்கள்.. அடுத்த 18 மாதங்களுக்கு நான் நினைப்பது போல நடந்தால் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8000ஐ கடந்துவிடும். இதே 18 மாதங்களில் தங்கம் ஒரு கிராம் ரூ.10,000ஐ தொடவும் 5% வரை வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ரூ.8000 முதல் ரூ.8500 வரை தங்கம் விலை எளிதாக செல்லும்" என்றார்
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications