"பாய போகுது தங்கம்.." இன்னும் 4 மாசம் தானே இருக்கு! அம்மாடி இவ்வளவு எகிறுமா.. ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தங்கம் விலை பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமலே இருந்து வருகிறது. இப்போது தங்கம் விலை ரூ. 6700 என்ற ரேஞ்சில் இருக்கிறது. இதற்கிடையே வரும் நாட்களில் தங்கம் விலை அதிகரிக்குமா.. அப்படியே அதிகரித்தாலும் அது எந்தளவுக்கு அதிகரிக்கும்.. அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை கடந்த 10 நாட்களாகப் பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமலேயே இருந்து வருகிறது. இப்போது தங்கம் விலை ரூ.6700 என்ற ரேஞ்சிலேயே இருந்து வருகிறது.

ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே வரும் நாட்களில் தங்கம் விலை எந்தளவுக்கு அதிகரிக்கும்.. அது அதிகரிக்க என்ன காரணம் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். சர்வதேச அளவில் நடக்கும் மூன்று மாற்றங்கள் தான் தங்கம் விலை அதிகரிக்கக் காரணம் என்று கூறும் ஆனந்த் சீனிவாசன், அடுத்த 18 மாதங்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தங்கம் விலை ரூ.6700 என்ற ரேஞ்சில் இருக்கிறது.. இந்தாண்டு அதிக ஆண்டு மிகப் பெரிய வின்னர் என்றால் அது தங்கம் தான். இந்தாண்டு இப்போது வரை தங்கம் நமக்கு 13.5% லாபம் கொடுத்துள்ளது.. அதேநேரம் நிஃப்டி 10.15% லாபம் கொடுத்துள்ளது. பேங்க் நிஃப்டி 8.25% லாபம் கொடுத்துள்ளது.
3 காரணங்கள்: இதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று உக்ரைன் ரஷ்யா மோதல்.. அடுத்து இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்.. அதேபோல அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
ரஷ்யா இந்தியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகள் முதலீடுகளை விரிவாக்கத் தங்கத்தில் முதலீடு செய்துள்ளன. சீனாவில் ரியல் எஸ்டேட் துறையில் பிரச்சினை இருக்கிறது. இதனால் சீன மக்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டு தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கம் விலை அதிகரிக்க இதுவே முக்கிய காரணங்கள்.நான் முன்பே சொன்னது போலத் தங்கம் விலை அடுத்த 18 மாதங்களில் அதிகரிக்கவே செய்யும்.
அமெரிக்கா: அமெரிக்காவில் பணவீக்கம் குறையத் தொடங்கியுள்ளதாகவே அனைத்து ரிப்போர்ட்களும் காட்டுகிறது. செப். மாதம் கடினம் என்றாலும் டிசம்பர் மாதம் ஒரு முறை அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பார்கள். அது பொருளாதாரத்தைப் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும் உளவியல் ரீதியாக பாசிட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அடுத்த ஆண்டு 2 அல்லது 3 முறை வட்டி விகிதத்தை உயர்த்துவார்கள். இதன் காரணமாகவே அடுத்த 18 மாதங்களில் தங்கம் விலை உயரும் என்கிறேன். அப்போது தங்கம் விலை 15% வரை உயர்த்து ரூ.8000ஐ தாண்டவும் வாய்ப்பு இருக்கிறது. இந்தாண்டு இப்போது வரை ஒரு 14%.. அடுத்த 12 மாதங்கள் 8%.. அதற்கு அடுத்த 12 மாதங்களில் 7 முதல் 8% வரை தங்கம் விலை அதிகரிக்கப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கி: தங்கம் விலை என்பது அமெரிக்கா வட்டி விகிதத்தைப் பொறுத்து பெரியளவில் மாறும். அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்தால் இங்குத் தங்கம் விலை குறையும். அதேநேரம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை சட்டென அதிகரிக்கத் தொடங்கும். அதைக் குறிப்பிட்டே ஆனந்த் சீனிவாசன் இப்படிப் பேசியுள்ளார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications