நாட்டின் 1% பணக்காரர் லிஸ்டில் வர என்ன செய்யணும்.. ஈஸியாக விளக்கும் ஆனந்த் சீனிவாசன்! அடடே சூப்பர்
சென்னை: நாட்டின் 1% பணக்காரர் என்ற லிஸ்டிற்குள் வர நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
பெரும் பணக்காரர் ஆக வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசை தான். ஆனால், அந்த இடத்திற்கு வருவது எப்படி வர முடியும் என்பது இங்கே பலருக்கும் இருக்கும் சந்தேகம். இது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இதனிடையே நாட்டின் 1% பணக்காரர் என்ற லிஸ்டில் வர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது மிகவும் சிம்பிள் என்று அவர் குறிப்பிடுகிறார்.
டாப் 1% பணக்காரர்: நாட்டின் மக்கள்தொகையில் டாப் 1%க்குள் வரச் சரியாகத் திட்டமிட்டால் போதும் என்கிறார் ஆனந்த் சீனிவாசன். இது தொடர்பாக அவர், "இதில் நமக்கு எந்தளவுக்குச் சொத்து இருக்கிறது என்பதைத் தாண்டி மாத மாதம் நமக்கு எந்த எந்த அளவு சம்பளம் வருகிறது என்பது முக்கியம். இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் வெறும் 15,000 ரூபாய் மட்டுமே மாதம் சம்பளமாகப் பெறுகிறார்கள்.
அதே நேரம் மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வருகிறது என்றால் நாட்டின் மக்கள் தொகையில் டாப் ஒரு சதவிகிதத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதே போல ரூ. 2 லட்சமாக இருந்தால் நாட்டின் டாப் ஒரு சதவீதத்தில் ஒரு சதவீதத்திற்குள் நீங்கள் வந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
சம்பளம்: இதில் மற்றொரு முக்கிய விஷயம் இருக்கிறது. அதாவது ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவர் மட்டும் இரண்டு லட்சம் சம்பாதிக்கிறார் என்றால் அது நாட்டின் டாப் ஒரு சதவீதத்தில் ஒரு சதவிகிதம் இல்லை. 2 லட்சத்தை 5ஆல் வகுத்தால் அதன் மதிப்பு குறைந்துவிடும்.
ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களைப் பார்த்தோம் என்றால் கணவர் ஒரு இடத்தில் டிரைவராக அல்லது அதுபோல எதாவது ஒரு வேலைக்குச் செல்வார். மறுபுறம் மனைவியும் தன்னால் முடிந்த வேலைகளைச் செய்வார். இதன் மூலம் அவர்களால் ரூ. 40,000 சம்பளமாக வரும். இதுபோக இப்போது தமிழக அரசு மாதம் ரூ. 1000 தருகிறது. முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறார்கள். மேலும், இவர்கள் ரேஷனில் அனைத்து பொருட்களையும் சென்று வாங்கிவிடுவார்கள். இதன் மூலம் அவர்கள் வருவாய் கிட்டதட்ட 60 ஆயிரம் போல இருக்கிறது.
இரண்டும் ஒன்றுதான்: மறுபுறம் ஐடி ஊழியர், அவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அவர் ஒருவர் மட்டும் 70 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என்ற குடும்ப வருவாய் அடிப்படையில் இந்த இரண்டு குடும்பங்களுமே ஒரே நிலையில் இருக்கிறது எனப் பொருள்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இரண்டு பேர் மட்டும் உள்ள குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது என்றால் அவர்கள் டாப் ஒரு சதவீதத்தில் ஒரு சதவீதத்திற்குள் இருக்கிறார்கள் என அர்த்தம். இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு வாடகை போக 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வருமானம் வந்தால் அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று பொருள். அவர்களுக்கு மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும். மருத்துவ காப்பீடு இல்லாமல் இருந்தால் இதில் சேர்க்க முடியாது.
டாப் இடத்தில் இருந்தால்: மொத்தத்தில் சென்னையில் இருக்கும் ஒருவர் சம்பளமாக 1 முதல் 1.5 லட்ச ரூபாய் வந்தால் நீங்கள் டாப்பில் இருக்கிறீர்கள் என அர்த்தம். இது தவிரக் கடன் பத்திரங்களில் ரூ.1 கோடி வரை முதலீடு தேவை. இதில் சொந்த வீட்டைக் கணக்கில் எடுக்க முடியாது. ஏனென்றால் 1.5 கோடி என்றாலும் சொந்த வீட்டிற்கு இப்போது வாடகை 20 ஆயிரம் தான் கிடைக்கும். இதெல்லாம் இருந்தால் நீங்கள் மக்கள்தொகையில் டாப் 1% வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்" என்று அவர் தெரிவித்தார்.
இது பொதுவான செய்தி மட்டுமே.. இதை யாரும் பொருளாதார ஆலோசனையாகக் கருதக் கூடாது. பொருளாதார ரீதியாக முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெற வேண்டும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications