தங்கத்தின் விலை எப்போது குறையும் தெரியுமா? காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்க! ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கத்தின் விலை எப்போதுதான் குறையும் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் ஆலோசனையை வழங்கியுள்ளார். தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றுள்ள நிலையில் தங்கம் என சொன்னாலே மக்கள் ஆசைப்படும் நிலை போய் அஞ்சும் நிலை வந்துவிட்டது.
தங்க நகைகளை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நகைக் கடை போல் இல்லாமல் குறைந்த நகைகளையாவது அணிவது பிடிக்கும். பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்கள் கூட இன்று நடமாடும் நகைக் கடை போல் கிலோ கணக்கில் நகை அணிந்து வருகிறார்கள்.

தங்கம், மண் மீது போடும் முதலீடு என்றுமே கைவிடாது என்பதால்தான் பலர் இவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் வீட்டில் தங்கம் இருந்தால் ஒரு ஆத்திர அவசரத்திற்கு அதை அடமானம் வைத்து பணம் பெறலாம்.
திருமணம்
வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தாலே அவர்களுக்கு நகை வாங்க வேண்டும் என்பதற்காக தங்கள் வருமானத்தில் சிறிய தொகையை சேமித்து வைப்பதும் வழக்கம். திருமணங்களிலும் தங்கம் பிரதானமாக இருந்து வருகிறது.
தங்கம் விலை
இப்படிப்பட்ட நிலையில் தங்கம் விலை 10 கிராமின் விலை ரூ 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை சவரன் 1 லட்சத்தை தாண்டும் என செய்திகள் வந்த நிலையில் தற்போது கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது.
31 கிராம்
ஒரு அவுன்ஸ் தங்கம் அதாவது 31.10 கிராம் 3023 அமெரிக்க டாலர்களாக உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த விலை 3050 டாலர்களாக இருந்தது. தற்போது ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் தங்கம் விலை நிம்மதியை தருகிறது.
ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வருவது போன்றவற்றால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது. சிட்டி வங்கியின் கணிப்புப் படி இந்த ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3500 டாலர்களாக இருக்கும் என கணித்துள்ளது.
பங்குச் சந்தை
மறுபக்கம் பங்குச் சந்தையும் வீழ்ச்சி அடைவதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனாலும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இந்த நிலையில் தங்கம் விலை குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் தங்கம் விலை 3000 டாலருக்கு மேல் இருக்கிறது.
ரூ 9 ஆயிரம்
இதே நிலை தொடர்ந்தால் ஓராண்டில் 3500 டாலருக்கு போய்விடும். அப்படிப் பார்த்தால் 22 கேரட் தங்கம் ரூ 9 ஆயிரத்தை தொட்டுவிடும். 24 கேரட் தங்கம் ரூ 10 ஆயிரத்தை தொட்டுவிடும். இது எப்போது நடக்கும் என தெரியவில்லை.
தங்கம், வெள்ளி
தங்கம் விலை உச்சத்திற்கு போகும் போது இந்திய பங்குச் சந்தையும் அடிவாங்கும் என அமெரிக்க பொருளாதார நிபுணர் தெரிவிக்கிறார். இதனால் தங்கம், வெள்ளி என இரண்டின் விலையும் அதிகரிக்கும். தங்க பத்திரங்களை வாங்கியவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தங்கம் விலை குறைவு
மேலும் தங்கம் விலை இன்று என்ன என்பதை பார்க்கலாம். சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 320 வரை குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ 40 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ 65,840-க்கும் ஒரு கிராம் ரூ 8,230-க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த இரு நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 640 குறைந்துள்ளது.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications