சர்னு சரியும் தங்கம்.. இன்னும் எவ்வளவு குறையும் தெரியுமா.? ஆனந்த் சீனிவாசன் சொல்லும் ஹேப்பி நியூஸ்
சென்னை: தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தங்கத்தை இப்போது வாங்குவது சரியாக இருக்குமா.. வரும் காலத்தில் தங்கம் விலை குறையுமா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் மிடில் கிளாஸ் மக்கள் எப்படிச் சேமிக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து மக்களுக்குப் புரியும் வகையில் விளக்கி வருபவர் ஆனந்த் சீனிவாசன். எளிய மக்களுக்கும் புரியும்படி மிக எளிதாக இவர் சேமிப்பு குறித்து விளக்கி வருகிறார்.
சமீப காலமாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கிடையே தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா என்பது குறித்தும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தங்கம்: எப்போதும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்போதும் சிறுக சிறுக சேமித்துத் தங்கத்தைத் தான் வாங்குவார்கள். தங்கத்தின் விலை பெரியளவில் குறையாது, தங்கத்தைக் கொண்டு எப்போது வேண்டும் என்றாலும் பணத்தை வாங்கலாம் எனப் பல காரணங்களால் எளிய மக்கள் எப்போதுமே தங்கத்தில் முதலீடு செய்யவே விரும்புவார்கள். நாம் இதுவரை வரலாற்றை எடுத்துப் பார்த்தால் நீண்ட கால நோக்கில் தங்கத்தின் விலை இதுவரை குறைந்ததே இல்லை.
தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்தே வந்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்போதும் தங்கத்திலேயே முதலீடு செய்ய விரும்புவார்கள். கொரோனாவுக்கு முன்பு 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 4300 என்று இருந்த நிலையில், கொரோனா வந்தவுடன் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இப்போது ஒரு கிராம் 6 ஆயிரம் வரை சென்றுவிட்டது. இதனால் தங்கம் விலை மீண்டும் எப்போது குறையும். எப்போது முதலீடு செய்யலாம் என்பதை மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே வரும் காலத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும், இப்போது வாங்கலாமா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கத்தின் விலை இப்போது தொடர்ந்து குறைய என்ன காரணம் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் தனது வீடியோக்களில், "தங்கம் விலை நிச்சயம் குறையும்.. இப்போது அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வைத்துள்ளன.
வட்டி விகிதம் உயர்வதை இன்று நிறுத்துவிட்டு, நாளையே குறைப்பார்கள் என மார்கெட் நினைக்கிறது. ஆனால், அமெரிக்காவில் இப்போதைக்கு வட்டி விகிதம் குறையாது. அங்கே தேர்தலும் கூட எதுவும் இப்போது இல்லை. அடுத்தாண்டு இறுதியில் தான் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, தங்கம் விலை இப்போதைக்கு அதிகரிக்க வாய்ப்பில்லை. தங்கம் விலை குறையும் போதெல்லாம் வாங்கலாம்.

எவ்வளவு குறையும்: உலகின் பல நாடுகள் சமீப காலமாகத் தங்கத்தை வாங்கிக் குவித்து வந்தன. அதுவும் தங்கம் விலை ஏற காரணமாக இருந்தது. இப்போது ரஷ்யாவும் துருக்கியும் தங்கத்தை வாங்குவதை நிறுத்தியுள்ளனர். அமெரிக்காவில் அடுத்தாண்டு தான் வட்டி விகிதத்தைக் குறைப்பார்கள். அதன் பின்னரே தங்கத்தின் விலை அதிகரிக்கும். தங்கத்தின் விலை 5100க்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
தங்கத்தின் விலை எப்போது குறைந்தபட்சத்தை அடையும் என்று யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாது. நீண்ட கால நோக்கில் தங்கம் விலை எப்போதும் அதிகரிக்கவே செய்யும் என்பதால், சற்று விலை குறையும் போதெல்லாம் தங்கத்தை வாங்குவதே சரியாக இருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications