40 ஆயிரம் சம்பளம் வாங்குறீங்களா? உங்களுக்கு எதுக்கு கார்! பஸ்ஸில் போங்க! கடுகடுத்த ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார் வாங்கினால் பழைய காரை எப்படி பார்த்து வாங்குவது என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம், பங்குச் சந்தைகள், முதலீடு, தங்கம், கார், வீட்டு மனைகள் உள்ளிட்டவற்றை எப்போது வாங்கலாம், வாங்கக் கூடாது, எப்படி வாங்கலாம் போன்ற தகவல்களை மக்கள் புரிந்து கொள்ளும்படி விளக்குபவர் ஆனந்த் சீனிவாசன்.

Anand Srinivasan says that BMW car will be bought for half of the rate?

இளைஞரிடம் பிரபலமாக உள்ள ஆனந்த் சீனிவாசன், முக்கியமாக 90ஸ் கிட்ஸ்களின் சேமிப்பு பழக்கம் என்பது வெகுவாக குறைந்துவிட்டது என கூறி பல விழிப்புணர்வு கருத்துகளை கொடுத்து வருகிறார். "நீ 90ஸ் கிட்ஸ், 40 ஆயிரம் சம்பளம் இல்லைனா ஏன் திருமணம் செய்துகிற, எதுக்கு ரூ 50 ஆயிரத்துக்கு போன்" என்றெல்லாம் இவர் கொந்தளித்து கேட்பார்.

இவரது கொந்தளிப்புகள் சமயங்களில் டிரோல் மெட்டீரியல் ஆவதும் கண்கூடாக பார்த்துள்ளோம். இந்த நிலையில் பெரும்பாலான மக்களின் கார் மீதான மோகம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார். யார் கார் வாங்கலாம், யார் வாங்கக் கூடாது என்பது குறித்தெல்லாம் அவர் தகவல்களை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஒரு யூடியூப் சேனலுக்கு ஆனந்த் சீனிவாசன் கூறியிருப்பதாவது: பிஎம்டபிள்யூ கார் கூட 10 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும். ஒரு வருஷம் பழமையான பிஎம்டபிள்யூ காரை ரூ 7 அல்லது 8 லட்சத்திற்கு வாங்கலாம். கார் வாங்கி 6 மாதம் பயன்படுத்தியிருப்பார்கள்.

பிறகு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும். அதை எப்படியாவது விற்க பார்ப்பார்கள். அதை வாங்கலாம். ஒரு ஆண்டிற்கு 10 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் போயிருந்தால் வாங்க வேண்டாம். 6 மாதம் பழமையான காரை பொறுமையாக தேடி வாங்கினால் பாதி விலைக்கு வாங்கலாம்.

என்னை கேட்டால் கார் வாங்காமல் இருப்பதுதான் சிறந்தது. கார் எப்போதுமே ஒரு சொத்து கிடையாது. அதற்கு மதிப்பு கிடையாது. பொது போக்குவரத்து இருக்கிறதே அதை பயன்படுத்துங்கள். எதுக்கு கார்? கணவரும் மனைவியும் சேர்ந்து ஒரு லட்சத்திற்கு மேல் மாத வருமானம் ஈட்டினால்தான் கார் வாங்க வேண்டும். ரூ 40 ஆயிரம் சம்பளம் வாங்குவோர் கார் பக்கமே செல்லக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

6 மாதம் பழமையான காரை வாங்கினால் 40 முதல் 50 சதவீதம் விலை குறைந்து வாங்கலாம். பழைய காரை வாங்கும் போது நீங்கள் வாங்கும் கம்பெனியின் கார் மெக்கானிக்கை அழைத்து சென்று செக் செய்ய வேண்டும். இப்போது கம்ப்யூட்டர் மூலம் சர்வீஸ் செய்கிறார்கள். நிறைய பேர் காரை வாங்கி பாலிஷ் போட்டு அதை அதிக லாபத்திற்கு விற்பனை செய்வார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+