சிறையில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூபாய் 100 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது. அதேசமயம், அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பி.டி. அரசகுமார், முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.

Anbil Mahesh

இந்த வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை கடந்த அக்.26 ஆம் தேதி விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அப்போது, "ஊழல் என்பது மிகக் கடுமையான பொருளாதாரக் குற்றம். அது அரசுக் கருவூலத்தை மட்டும் பாதிப்பதில்லை. மனித குலத்துக்கு எதிரான குற்றமாகவும் இருக்கிறது. மனித உரிமைகளையும் நேரடியாகப் பாதிக்கிறது. கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் இறுதியாக யாருக்குச் சென்றது என்பதைக் கண்டறிய வேண்டி இருக்கிறது" என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்றும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 6 ஆம் தேதி வரை அன்பில் மகேஷை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவிட்டார். இதனையடுத்து சென்னை புழல் சிறையில் அன்பில் மகேஷ் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு இன்று (அக்.29) விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தலைமறைவாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ முத்துகுமார் உடனான தொடர்புகள், யார் யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் மனு குறித்து அரசு தரப்பில் முறையிடப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+