சிக்கலில் அன்பில் மகேஸ்? நண்பர் வாளாடி கார்த்திக்கிடம் விசாரணை.. ரூ.100 கோடி லஞ்ச புகாரில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளின் அங்கீகாரம், தர உயர்வு, டிடிசிபி அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இப்போது முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் நண்பர் வாளாடி கார்த்திக்கிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவெக ஆட்சி அமைந்த உடனேயே முந்தைய ஆட்சி தொடர்பாக பல புகார்கள் பெரிதாக வெடித்தன. அதில் முக்கியமான தனியார் பள்ளி நிர்வாகங்களின் அங்கீகாரம், தர உயர்வு ஆகியவற்றுக்கு லஞ்சம் வாங்கியதாகவும் இதில் பல கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாகவும் பிரச்சினை பெரிதாக வெடித்தது.

Anbil Mahesh Valadi Karthik

அன்பில் நண்பரிடம் விசாரணை

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்றைய தினம் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் நண்பர் வாளாடி கார்த்திக்கிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் தான் விசாரணைக்கு ஆஜராகும்படி வாளாடி கார்த்திற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அந்த சம்மனை தொடர்ந்து வாளாடி கார்த்தி இன்று விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

உதவியாளர் அருள் முருகன்

இதே வழக்கில் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் முன்னாள் உதவியாளர் அருள் முருகனிடமும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக இந்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முன்னாள் உதவியாளரிடம் விசாரணை நடக்கும் போதே, அன்பில் மகேஸின் நண்பர் வாளாடி கார்த்திக்கிடமும் விசாரணை தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகார் என்ன

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவது, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது, டிசிசிபி அனுமதி மற்றும் பிற அரசு அனுமதிகளை பெற்று தருவது உள்ளிட்ட பணிகளை செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பி டி அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேரை போலீசார் . கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது.

அன்பில் மகேஸ்

வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், அன்பில் மகேஸ் இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சுமார் 8 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. மேலும், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படியும் சம்மன் அனுப்பப்பட்டது.

இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அன்பில் மகேஸ், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் சட்டரீதியாக இதை எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு முன்பு ஆஜரானார்.. அப்போதும் அதிகாரிகள் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+