காலமும்.. கடமையும்.. நம் நட்பும்.. நாமும்.. உதயநிதிக்கு 'நேம்' கொடுத்த அன்பில் மகேஷ்!
உதயநிதி ஸ்டாலினுக்கு அன்பில் மகேஷ் புதிய பெயர் பலகை தந்து வாழ்த்து தெரிவித்தார்
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அன்பில் மகேஷ் பெயர்ப்பலகையை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ் குடும்பம் தமிழகம் அறிந்த ஒன்றுதான். மறைந்த கருணாநிதியின் முக்கியமான நண்பர்களில் ஒருவர் அன்பில் தர்மலிங்கம்.
இவரது மகன் அன்பில் பொய்யாமொழி ஸ்டாலினுக்கு மிக நெருங்கிய நண்பர். அவரது மகனான அன்பில் மகேஷ் உதயநிதியின் நண்பர். ஆக மொத்தம் இது வாழையடி வாழையாக நட்பில் தொடரும் குடும்ப உறவு ஆகும்.

முன்னேறினார்
அன்பில் மகேஷின் நெருக்கம் உதயநிதி ஸ்டாலினின் அகில இந்திய ரசிகர் மன்றத்தை கவனித்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது. கொஞ்ச நாளிலேயே திமுகவின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளராக முன்னேறினார். அப்போது கட்சிக்குள் முக்கியத்துவம் வாய்ந்தவராக மகேஷ் வலுப்பெறுவார் என்று பேசப்பட்டது. இவர்களுக்குள் நெருக்கம் இப்போது வரை தொடர்ந்து வருகிறது.

நிர்வாகிகள்
குறிப்பாக உதயநிதி இளைஞரணி செயலராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்தே பக்க பலமாக இருந்து வருவது அன்பில் மகேஷ்தான். காலியாக உள்ள இளைஞரணி நிர்வாகிகள் பதவிகளை நிரப்புவதற்காக, புதிய நிர்வாகிகள் தேர்வு, ஆக்டிவ்வாக இல்லாத நிர்வாகிகளை களையெடுப்பது உள்ளிட்ட பொறுப்புகூட மகேஷிடம்தான் தரப்பட்டுள்ளது.

வாசகம்
இப்போதுகூட "உதயநிதி, செயலாளர், திமுக இளைஞர் அணி" என்ற பெயர்பலகையை மகேஷ் உதயநிதியிடம் அளித்துள்ளார். இதை ஒரு போட்டோ எடுத்து தனது ட்வீட்டிலும் போட்டுள்ளார் மகேஷ். "காலமும் கடமையும்! நம் நட்பும் நாமும்!🖤♥️" என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.
|
பெயர் பலகை
இந்த ஒத்த வரி ட்வீட்டில் இரு பேரன்களின், தாத்தாக்கள், அப்பாக்களின் நட்பு வளர்ந்து விரிந்து தங்கள் தலைமுறையிலும் தொடர்வாக உணர முடிகிறது. பளபளவென மின்னும் இந்த புதிய பெயர்பலகை இனி உதயநிதி ஆபீஸ் வெளியே தாங்கி அனைவரையும் வரவேற்க காத்திருக்கிறது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications