என்னாது கார் மாத்தி ஏறிட்டியா.. இப்படியே போனா என்னவாகும் தெரியுமா.. உதயநிதியிடம் அன்பில் மகேஷ் கலகல!
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியும் உதயநிதி ஸ்டாலினும் கார்களில் மாற்றி ஏற முயற்சித்தது குறித்து சட்டசபையில் உதயநிதி சொன்ன போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய ஒரு பதில் கலகலப்பை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா, டாக்டர் எழிலன் உள்ளிட்டோர் நண்பர்கள். சின்ன வயதிலிருந்தே ஒன்றாகவே வளர்ந்தவர்கள். இவர்களில் உதயநிதியும் அன்பில் மகேஷும் நண்பேன்டா எனும் அளவுக்கு மிகவும் திக்கான பிரென்ட்ஸ்.
அன்பில் மகேஷ் அமைச்சராக பதவியேற்ற போது உதயநிதி ஆனந்த கண்ணீர் விட்டார். அது போல் சட்டசபையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது பேசிக் கொண்டிருந்தார்.

எதிர்க்கட்சிகள்
அவர் எந்தவித குறிப்புகளும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு புள்ளி விவரத்துடன் பதில் அளித்தார். இதை காண்பதற்காக தனது சீட்டிலிருந்து எழுந்து வந்து அன்பிலின் பின் சீட்டில் அமர்ந்தார் உதயநிதி. அவர் பேசுவதை பார்த்து உதயநிதி மகிழ்ச்சியில் பூரித்து போனார்.

சட்டசபையில் கலகலப்பு
இந்த நிலையில் சட்டசபையில் அண்மைக்காலமாக கலகலப்பு நடந்து வருகிறது. சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கிருந்த உதயநிதியின் காரில் தவறுதலாக ஏற முயன்றார். அப்போது அங்கிருந்த காவலர் அலர்ட் செய்ததால் அவர் தனது காரில் ஏறி சென்றார்.

உதயநிதியும்தான்
அது போல் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் உதயநிதியும் எடப்பாடி பழனிச்சாமியின் காரில் ஏற முயன்றார். அப்போது அந்த காரில் ஜெயலலிதாவின் படம் இருந்ததால் சுதாரித்துக் கொண்டு தனது காரில் ஏறினார். இவர்கள் இருவரின் கார்களும் ஒரே மாதிரி இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டது.

அன்பில் மகேஷ் நகைச்சுவை
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் முடிந்து நேற்று வெளியேறும் போது அமைச்சர் அன்பில் மகேஷ், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் ஆகியோருடன் உதயநிதி உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எடப்பாடி காரில் மாற்றி ஏறிய சம்பவத்தை தெரிவித்தார். அப்போது அன்பில் மகேஷ், இப்படியே போனால் அருகில் இருப்பது யார் என்று கூட தெரியாமல் பேசிக் கொண்டே போக வேண்டியதுதான் என நகைச்சுவையாக அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications