ஜாமீன் வேணும்.. அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய அன்பில் மகேஷ்! நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு!
சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் இன்று ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், அன்பில் மகேஸுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்த நிலையில், நாளை விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய் வசூலித்து மேசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரால் கடந்த அக்.26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரை, நவ.6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அன்பில் மகேஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதாகக் கூறி, சிறப்பு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இந்தநிலையில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் இன்று ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், அன்பில் மகேஸுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தார்.
மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகள் இன்று மதியத்திற்குள் முடித்துவிட்டால் நாளை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார். அதேபோல் இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ள, தனியார் பள்ளிகளிடம் நிதி வசூலித்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என மூத்த வழக்குரைஞர் வில்சன் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அந்த வழக்கு விசாரணையை நவ.30-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications
