“டாக்டர். அன்பில் மகேஷ்”.. முனைவர் பட்டம் பெற்று அசத்தல்.. பெருமை பொங்க வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ள நிலையில், "என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன்! "முனைவர்" பட்டம் பெற்றுள்ள தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாழ்த்துகள்!" என தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முனைவர் (PhD) பட்டம் பெற்றுள்ளார். அதாவது திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் Physical activities for skill development among school children using machine learning-ல் தனது ஆய்வை நிறைவு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது" என எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் மாண்புமிகு முதலமைச்சர் முதல்வர் ஸ்டாலின் கூறிய அறிவுரை எனக்கும் பொருந்தும்!
அதன்படி, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021-ஆம் ஆண்டு முதல் "Physical Activity for Skill Development Through Machine Learning" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தேன். அதன் வாய்மொழித் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் எனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டு "முனைவர்" பட்டம் பெற்றுள்ளேன் என்பதைப் பெரு மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
முனைவர் பட்டம் பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக ஆட்சியில் அமர்ந்த பிறகு முனைவர் பட்டம் பெறும் இரண்டாவது அமைச்சர் அன்பில் மகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முனைவர் பட்டம் பெற்றார்.
முனைவர் பட்டம் பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "When leaders learn, generations dream bigger! என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன்! "முனைவர்" பட்டம் பெற்றுள்ள தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாழ்த்துகள்!
When leaders learn, generations dream bigger!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 17, 2025
என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன்! “முனைவர்” பட்டம் பெற்றுள்ள தம்பி @Anbil_Mahesh-க்கு வாழ்த்துகள்!
கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற… https://t.co/F5fpzEC5Me
கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற எனது சொல்லை, எனது அமைச்சரவையிலும், குடும்பத்திலும் இருந்து கடைப்பிடித்திருக்கிறார் அன்பில் மகேஸ்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றிக் கொண்டே முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், பணிச்சுமை - நேரமின்மை - வயது ஆகியவற்றைக் கடந்து கல்விபெறத் துடிக்கும் அனைவருக்கும் 'Role Model' ஆகிவிட்டார்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications