அன்பில் உதித்த சூரியன்.. நண்பேன்டா.. அமைச்சராக பதவியேற்றபோது உதயநிதி ஆனந்த கண்ணீர்.. மகேஷ் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தான் பதவியேற்றுக் கொண்ட போது தனது நண்பன் உதயநிதி தூரத்தில் இருந்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார் என தனது ட்விட்டர் பக்கத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அமைச்சரவையை ஸ்டாலின் பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளார். கடந்த 7ஆம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினு எனும் நான்... என கூறினார்.

அப்போது அங்கிருந்த துர்கா ஸ்டாலின் வெடித்து விம்மி அழுதார். பின்னர் உடனிருந்த உதயநிதியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். தனது தாய் துர்காவை சமாதானம் செய்தார்.

பள்ளிக் கல்வித் துறை

பள்ளிக் கல்வித் துறை

அது போல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பதவியேற்பதற்கு முன்னர் துர்காவிடம் ஆசி வாங்கினார் அன்பில் மகேஷ். பின்னர் தனது நண்பர் உதயநிதியை கட்டித் தழுவினார். இதையடுத்து ஒவ்வொரு அமைச்சராக பதவியேற்றனர்.

உதயநிதி ஆனந்தம்

உதயநிதி ஆனந்தம்

அப்போது அன்பில் மகேஷ் அழைக்கப்பட்டார். பின்னர் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போது உதயநிதியின் கண்கள் ஆனந்தத்தால் குளமாகின. நேற்று வரை தனது நண்பராக இருந்த அன்பில் மகேஷ் இன்று அமைச்சராக உயர்ந்ததும் தன்னை மீறி உதயநிதிக்கு கண்ணீர் வந்துவிட்டது.

அன்பில் உதித்த சூரியன்கள்

அன்பில் உதித்த சூரியன்கள்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கழகமே ! நம் குடும்பம்!
இயக்கமே! நம் இதயம்!
என்ற கொள்கையை
தரணிபோற்ற செய்த!
அன்பில் உதித்த சூரியன்கள்!

என தனது பதவியேற்பு வீடியோவுடன் அன்பில் மகேஷ் பதிவிட்டுள்ளார். இந்த நண்பேன்டா ட்வீட்டுக்கு பலர் பதிலளித்துள்ளார்கள்.

நட்பின் இலக்கணங்களே!

நட்பின் இலக்கணங்களே!

நட்பின் இலக்க்கானங்களே வாழ்த்துக்கள், அன்பிலாரின் அருமை புதல்வரே, தற்போதைய தமிழகத்தின் கல்வி அமைச்சரே, உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள், தமிழ்நாட்டின் அனைத்து வகையான கல்வி கோட்பாட்டில் தமிழ் கட்டாய பாடமாகவும், தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய பாடமும் வேண்டும் என்கிறார் இந்த வலைஞர்.

நட்புக்கு இலக்கணம்

நட்புக்கு இலக்கணம்

கோப்பெருஞ்சோழன்-பிசுராந்தையர்
கிருஷ்ணர்-குசேலர்
இவர்கள் நட்பை படித்திருக்கிறோம் பார்த்ததில்லை

உங்கள் மூன்று தலைமுறை நட்பை பார்த்துதான் அவர்களின் நட்பையே யூகிக்க முடிகிறது.

இனி உலகில் நட்புக்கு ஒரேஒரு உதாரணம் கூறவேண்டுமென்றால் அது அன்பில் மகேஷ் - உதயநிதி என்றே கூறமுடியும் என்கிறார் இந்த வலைஞர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+