தமிழகத்தின் கல்வியின் தரம் குறித்து ஆளுநர் ரவி பேசுவது உண்மை இல்லை.. கொந்தளித்த அன்பில் மகேஷ்
சென்னை: தமிழகத்தின் கல்வித் தரம் நன்றாக உள்ளது என்று அனைவரும் பாராட்டும்போது, கல்வியின் தரம் குறித்து ஆளுநர் பேசுவது உண்மை இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியார்களிடம் கூறியதாவது: பரிட்சையின் மூலமாக நடத்தப்படும் மதிப்பீடுகளைத் தாண்டி தொடர்ந்து ஒவ்வொரு வகுப்புகளிலும் மதிப்பீடுகளை செய்யத் தொடங்கிவிட்டோம். மாநில அளவிலான சாதனைகளின் சர்வே என்றும் வரும்போது ஏறத்தாழ 9 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களை மதிப்பீடு செய்து அதுசார்ந்த திறன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் படிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கான திட்டங்களாக இருந்தாலும் சரி அதனை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம்.

உளவியல் ரீதியாக தொடர்ந்து மாணவர்களை மூன்று ஆண்டுகளுமே வைத்துக் கொள்ளக் கூடாது. 11 ஆம் வகுப்பை தவிர்த்துவிட்டு 12 ஆம் வகுப்பை மட்டும் போகஸ் செய்யும் காலம் எல்லாம் போய்விட்டது. 11 ஆம் வகுப்பில் கவனம் செலுத்தாமல் எந்தவொரு போட்டித் தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ள முடியாது என்கிற சூழ்நிலையை ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும், ஆசிரயர்களும் உணர்ந்து கொண்டதால் 12 ஆம் வகுப்புக்கான முன்னேற்பாடுக்கான ஆண்டாக 11 ஆம் ஆண்டு கல்வி அமைய வேண்டும்.
குழந்தைகளுக்கு அழுத்தம் இருக்க கூடாது. கற்றலும், கற்பித்தலும் மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக 10, 12 ஆம் வகுப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான இடமாக 11 ஆம் வகுப்பு அமைந்துவிச வேண்டுமே தவிர அதுவும் பிள்ளைகளுக்கு அழுத்தத்தை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இப்போது அது நீக்கப்பட்டுள்ளதால் நல்ல ரிசல்ட் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
பாடத்திட்டத்தில் 7 ஆண்டிற்கான மறுசீரமைப்பு பணிகள் செய்து கொண்டிருக்கிறோம். அதற்காக குழு இந்த மாதத்தில் அமைக்கப்படவுள்ளது. குழு அமைத்த பின்னர் குறிப்பாக என்சிஆர்டி மூலமாக மறைக்கப்பட்ட நம்முடைய வரலாறு, தியாகிகளின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்படும். மற்ற வரலாறுகள் அவசியம்தான். முதலில் நம்முடைய வரலாற்றை தெரிந்து கொண்ட பின்பு மற்றவர்களின் வரலாற்றையும் நம் பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் வகையில் குழுவிற்குப் பரிந்துரை செய்யப்படும்.
திறன் தேர்வில் 7 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்தது குறித்த கேள்விக்கு, யுனேஸ்கோ அமைப்பே ஏசர் என்கிற நிர்வாகம் செய்கிற செயலை வன்மையாக சாடியுள்ளது. திருப்பி ஏசர் ரிப்போர்ட்டை வைத்துக் கொண்டு ஆளுநர் பேசிக் கொண்டு வருவதற்கு நேற்றே அறிக்கை விட்டுள்ளேன். தமிழ்நாட்டில் நானும் இருக்கிறேன், தமிழகத்தைச் சேர்ந்த ஆளுநர் என்பதை காட்டிக் கொள்வதற்காக இதைப் பேசிக் கொண்டிருப்பது நம் மாணவர்களையும், ஆசிரியர்களயும் மன ரீதியாக நீங்கள் இன்ஃபீரியராக யோசிக்க வைக்கும் செயலை செய்கிறீர்கள்.
குறிப்பாக உங்கள் அறிக்கையில் மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு நம் கல்வித் தரம் இருக்கிறு என்று கூறிக்கொண்டு, உட்பிரிவு என்று வரும்போது தரக்குறைவாக சொல்லிக் கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும் தரம் தாழ்த்திப் பேசுவதை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications