அன்பில் மகேஷ் என்ன பயங்கரவாதியா? ரிமாண்ட் செய்யக்கூடாது.. வழக்கறிஞர் வில்சன் வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்பில் மகேஷ் என்ன பயங்கரவாதியா.. நீதிமன்றம் ஜாமீன் மறுத்த உடனே அவசர அவசரமாக காவல்துறை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று திமுக சார்பில் ஆஜரான வில்சன் நீதிமன்றத்தில் வாதம் வைத்தார். மேலும், ஊழல் தடுப்பு சட்ட விதிகளின் படி முறையான அனுமதி இல்லாமல் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவரை ரிமாண்ட் செய்யக்கூடாது என்று வாதிட்டார்.

திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து விசாரணைக்கு பிறகு, நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

Anbil Mahesh should not be remanded advocate Wilson argues in court

அன்பில் மகேஷை ரிமாண்ட் செய்யக்கூடாது என்று அவரது தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அன்பில் மகேஷ் தரப்புக்கு ஆதரவாக வழக்கறிஞர் வில்சன் வைத்த வாதத்தில் கூறியதாவது:-

ஊழல் தடுப்பு சட்ட விதிகளின் படி முறையான அனுமதி இல்லாமல் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அவரை ரிமாண்ட் செய்யக்கூடாது. முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷ் மீது வழக்கு தொடர ஆளுநரிடம் முன் அனுமதி பெறவில்லை. அன்பில் மகேஷ் தீவிரவாதி அல்ல.

அவரை ரிமாண்ட் செய்யக்கூடது. முன் ஜாமீன் மறுக்கப்பட்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தோம்.. உரிய ஒப்புதல் இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது சட்ட விரோதமானது. அமைச்சர் மட்டும் கோப்புகளில் கையெழுத்திடுவது இல்லை. அரசு துறை அதிகாரிகள் கையெழுத்திட வேண்டும்.

தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல்தான் வழக்குக்கு காரணம். அரசகுமார் பணம் வசூலித்து தனது பெயரில் சொத்து வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. கைது செய்ய என்ன தேவை உள்ளது. வெறுமனே கைது செய்யக்கூடாது. கடந்த ஒன்றரை மாதங்களாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்" என்று பரபரப்பான வாதங்களை வைத்து வருகிறார்.

அதேநேரத்தில் அன்பில் மகேஷ், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் அவரை ரிமாண்ட் செய்வது அவசியம். அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே உள்ளது. எனவே அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டும் என்று வாதிடப்படது. காவல்துறை சார்பாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி வாதிட்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+