யார் கண்ணை உறுத்துகிறது என தெரியவில்லை.. கைது குறித்து அன்பில் மகேஷ் பேட்டி!
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து இருக்கோம். சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வேன்" என்றார்.
மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இது யார் கண்ணை உறுத்துகிறது என தெரியவில்லை.. முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளனர். சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வேன் என்று கூறினார்.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அன்பில் மகேஷ் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்த நிலையில், அவரை சென்னை அமைந்தகரையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் வைத்து அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது:-
அவர்கள் அழைப்பை ஏற்று முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து இருக்கோம். ஏற்கனவே செப்டம்பர் 18 ஆம் தேதி, உங்க எல்லாருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 7 முதல் 8 மணி நேரம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இது யார் கண்ணை உறுத்துகிறது என தெரியவில்லை.. முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளனர். சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வேன்.." என்று கூறினார்.



Click it and Unblock the Notifications
