அன்பில் மகேஷுக்கு சிக்கல்.. சம்மன் அனுப்பிய சிசிபி! விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு பள்ளி உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் திமுக பிரமுகரும், போலிதனியார் பள்ளிகள் கூட்டமைப்பை நடத்தி வந்த பிடி அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.அவரிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான இடங்களில் நேற்று 8 மணி நேரம் ரயில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை அன்பில் மகேஷ் பொய்யாமொழி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக பிரமுகரும், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகியுமான பி.டி. அரசகுமார் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.

Anbil Mahesh CCB DMK

அந்த புகாரில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தர உயர்வு, கூடுதல் வகுப்பறைகள் அமைக்க அனுமதி, கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

அன்பில் மகேஷ்

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திமுக செய்தித் தொடர்புக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரான பி.டி. அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிடி அரசகுமார்

பிடி அரசகுமார் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 3 பேருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் அரச குமாரிடமும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளரான வாளாடி கார்த்திக் ஆகியோருக்கு சொந்தமான 8 இடங்களில் 20க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சிக்கிய ஆவணங்கள்

சுமார் 8 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் வங்கி பரிவர்த்தனைகள், பள்ளி அங்கீகாரம் தொடர்பான ஆவணங்கள், மனுக்கள், ஹார்ட் டிஸ்க்கள், காசோலைகள், லேப்டாப்கள், 18 செல்போன்கள், ஒரு ஐபாட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு போலீசார் கூறியிருந்தனர். இந்த நிலையில் 8 மணி நேர சோதனையின் அடிப்படையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை செப்டம்பர் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர்கள்

ஏற்கனவே பல்வேறு திமுக முன்னாள் அமைச்சர்கள் விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கேஎன் நேரு வரிசையில் தற்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடி விசாரணையை எதிர்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அன்பில் மகேஷ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் தயாராகவே இருக்கிறார்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+