நடிகர் விஜய் முன்னெடுக்கும் புதிய முயற்சி! முக்கியமான அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் இரவு நேர பாடசாலை தொடங்குவது நல்ல விஷயம் என்று வரவேற்பு தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இல்லம் தேடிக் கல்வியின் நோக்கமும் அது தான் என தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் நேரில் சந்தித்து பேசிய நடிகர் விஜய், காமராஜர் பிறந்தநாளான இன்று முதல் இரவு நேர பாடசாலை தொடங்குவது பற்றி சில அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று ''தளபதி விஜய் பயிலகம்'' என்ற பெயரில் இரவுநேர பாடசாலை ஆரம்பிக்கவுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத சூழலிலும், அவரது ரசிகர் மன்றத்தினர் மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்க தொடங்கிவிட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட முழுமையாக இல்லாத நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் தமிழக அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்நிலையில் இன்று அவர் தொடங்கும் இரவு நேர பாடசாலையும் மிகுந்த கவனம் ஈர்த்துள்ளன. நடிகர் விஜய் முன்னெடுக்கும் இந்த திட்டத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்பு தெரிவித்துள்ள போது, தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் நோக்கமும் அது தான் என்பதை பளிச்சென்று கூறியிருக்கிறார்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் கொரோனா காலத்தில் கல்வியை கைவிட்டவர்களை சேர்ப்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கென தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications