அன்புமணிக்கு குடும்ப பிரச்சினை.. அதை சமாளிக்க முடியாமல்.. நான் பேசியதை திரித்து பரப்புகிறார்! பிடிஆர் பதிலடி
சென்னை: தமிழ்நாடு தொழில்துறையின் வளர்ச்சி பிற தென் மாநிலங்களை விடக் குறைவாக இருப்பதாக அமைச்சர் பிடிஆரே கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்திருந்தார். இதற்கிடையே அமைச்சர் பிடிஆர் தனது பேச்சுக்கு விளக்கமளித்துள்ளார். அன்புமணி தனது குடும்பப் பிரச்சினையைத் திசைதிருப்பவே இதுபோல பேசி வருவதாகச் சாடியுள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சி குறைந்துவிட்டதை அமைச்சர் பிடிஆரே ஒப்புக்கொண்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். தொழில்துறையின் வளர்ச்சி பிற தென் மாநிலங்களை விடக் குறைவாக இருப்பதாக அமைச்சர் ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் அன்புமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பிடிஆர் விளக்கம்
இது குறித்து பிடிஆர் சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "அரைகுறையாகத் தகவலை வைத்துக் கொண்டு.. அரசியலுக்காக அல்லது அவர்களின் சொந்த சூழ்நிலையைத் திசைதிருப்பவும் பேசுவது தவறான செயல். நான் என்றும் புள்ளி விவரம் மற்றும் அடிப்படைத் தகவல்களோடு பேசுபவன்..
தொழிலதிபர்களின் குழுமம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நான் பேசினேன். அதில் நான் கூறிய கருத்துகளைச் சரியாகக் கவனிக்க வேண்டும்.. இன்று நேற்று இல்லை.. கடந்த 20, 30 ஆண்டுகளாக ஒப்பீட்டு பார்க்கும்போது அப்போது தமிழகம் முன்னிலையில் இருந்தது.. பிற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தன. ஆனால், கடைசி 20 ஆண்டுகளில் அவர்கள் நம்மை நெருங்கி வருகிறார்கள். சில இடங்களில் அதிகரித்துவிட்டனர் என்றே குறிப்பிட்டேன்.
அரசியலைத் தவிர்த்தேன்
அங்கு அரசியல் பேசக்கூடாது என்பதற்காகவே 20, 30 ஆண்டுகள் என பொதுவாகப் பேசினேன். இப்போது தெளிவாகவே அதற்கு விளக்கம் தந்துவிடுகிறேன். கடந்த 2019-20ல் தமிழக சட்டசபையில் உரையாற்றும்போது இதே கருத்துகளைத் தெரிவித்தனர். ஒரு காலத்தில் ரொம்ப முன்னிலையில் இருந்த தமிழகம் (அப்போதிருந்த) அதிமுக ஆட்சியில் பின்தங்கிவிட்டதாகக் கூறியிருந்தேன்.
விரிவான விளக்கம்
இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் ஒரு காலத்தில் நமது பங்களிப்பு 11%ஆக இருந்த நிலையில், இப்போது 9%ஆக குறைந்துவிட்டது. இதே ஆந்திரா 4%ல் இருந்து 6%ஆக உயர்ந்துவிட்டது. நீங்கள் தொழில்துறையில் கவனம் செலுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது எனக் கூறினேன். கருணாநிதி ஆட்சி நிறைவடையும் போது (2011) தமிழ்நாட்டின் ஜிடிபியில் கிட்டத்தட்ட 20% உற்பத்தித் துறையாக இருந்தது. ஆனால், 2019ல் அது 15%ஆகச் சரிந்துவிட்டது. சர்வீஸ், கட்டுமான துறை தான் வளர்ந்துள்ளது என்றும் சொல்லியிருந்தேன்.
ஐடி துறையிலும் நாம் தான் 2001ல் முன்னோடியாக இருந்தோம். ஆனால், பெங்களூர் இப்போது நம்மைத் தாண்டிவிட்டது.. நாம் முக்கியமாக இழப்பைச் சந்தித்த காலகட்டம் என்றால் அது 2010- 2020 காலகட்டம் தான். நான் இப்போது தெளிவாகவே சொல்கிறேன்.. அந்த 20 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் அதிமுக தான் ஆட்சியில் இருந்தது.
திமுக ஆட்சியில் சிறப்பான வளர்ச்சி
ஆனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு.. நான்கே ஆண்டுகளில் தமிழகம் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தித் துறையில் மீண்டும் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 15%ஆக தமிழகத்தின் பங்கு இருக்கிறது. நமது ஜிடிபியிலும் உற்பத்தித் துறை 20%ஆக உயர்ந்துள்ளது. எலக்டிரானிக் உற்பத்தியில் 5ல் இருந்த தமிழகம் இப்போது முதலிடத்திற்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே வேகமாக வளரும் மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.
அன்புமணிக்கு குடும்பப் பிரச்சினை
அந்த நிகழ்ச்சியில் அரசியல் ரீதியாகப் பேச வேண்டாம் எனக் கட்சி பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், நான் ஏதோ எங்கள் ஆட்சியையே குற்றம்சாட்டுவது போல ஒருவர் பேசுகிறார். அவர் தனது குடும்பப் பிரச்சினையையும் கட்சி பிரச்சினையையும் மாற்றிப் பேசுகிறார். இதைப் பார்த்தால் கொஞ்சம் காமெடியாகவே இருக்கிறது. திமுக ஆட்சியில் இருந்த வளர்ச்சியை அதிமுக கொடுத்திருந்தால் நமது வளர்ச்சி எங்கேயோ போய் இருக்கும் என்பதே உண்மை. அதைத்தான் நான் சொல்ல வந்தேன்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications