கழுத்தறுத்த எடப்பாடி.. 12 தோல்வி பழனிசாமியாக்கிய பாமக! சத்தமில்லாம அதிமுகவை சரித்த அன்புமணி! எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் தமிழக வெற்றி கழகத்திற்கு உற்சாகத்தையும், திமுகவுக்கு ஆறுதலையும் தந்திருக்கிறது. ஆனால் அதிமுகவுக் கடும் அதிர்ச்சி தான். 2026 சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளிலும் வென்ற அதிமுக இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் பாமக ஆதரவு தராமல் விலகிக் கொண்டதுதான் தோல்விக்கு காரணம் என்கின்றனர் அப்பகுதி வாசிகள். அதே நேரத்தில் சட்டசபை தேர்தலின் போது எடப்பாடி பழனிச்சாமி பார்த்த வேலைக்கு, சத்தம் இல்லாமல் பழி வாங்கி இருக்கிறார் அன்புமணி என்கின்றனர் பாமகவினர்.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவானது. அதே நேரத்தில் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லாததால் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறது.

Anbumani Ramadoss Edappadi Palaniswami PMK AIADMK

அதே நேரத்தில் இடைப்பட்ட நேரத்தில் தான் தமிழக முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தால் எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் பேச்சு நடத்தியதாகவும், அதனால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி மரகதம் குமரவேல், சத்தியபாமா, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தனர்.

இதை அடுத்து தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவும் நிறைவடைந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 2 தொகுதிகளையும் தமிழக வெற்றிக்கழகம் கைப்பற்றி உள்ளது. கடந்த தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட திமுக, இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. கடந்த தேர்தலை போலவே தங்கள் வாக்கு அப்படியே கிடைத்திருப்பதாகவும் கூட்டணி இல்லாமல் தனித்தே திமுக இந்த சாதனையை செய்திருப்பதாக திமுகவினர் கூறிய வருகின்றனர். இந்த தோல்வி தங்களை லேசாக பாதித்திருந்தாலும் வரும் தேர்தல்களை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம் என்கின்றனர் திமுகவினர்.

அதே நேரத்தில் அதிமுகவுக்குத்தான் பெரும் சிக்கல் எழுந்திருக்கிறது. கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளையுமே அதிமுக வென்றிருந்தது. தமிழக முழுவதும் ஆளும் கட்சியான திமுகவின் பலம், விஜய் அலை ஆகியவற்றை தடுப்பொடியாக்கி இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றிய நிலையில் இந்த தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக.

இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. 10 தோல்வி பழனிச்சாமி, 11 தோல்வி பழனிச்சாமி என அவரை விமர்சித்து வந்த எதிர் தரப்பினர், தற்போது 12 தோல்வி பழனிச்சாமி என விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். மேலும் கட்சியை விட்டு அவர் விலக வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் மதுராந்தகம் தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக படுதோல்வியை சந்திக்க பாமக தான் காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அதாவது இந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் பாமக ஆதரவளித்து இருந்தால், அதிமுக ஓரளவு வாக்கு வங்கியை தக்க வைத்திருக்க முடியும். ஆனால் கடைசி நேரத்தில் யாருக்கும் ஆதரவு இல்லை என அன்புமணி ஒதுங்கிக் கொண்டார். இதற்கிடையே அமைச்சரவையில் சௌமியா அன்புமணிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் பாமகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் வென்று விட்டால் விசிக வெளியேறும் பாமகவை அமைச்சரவைக்குள் கொண்டு வரலாம் என பாமகவினர் நம்பினர். இதை அடுத்து பாமகவின் பெரும்பாலான வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஏன் கடைசி நேரத்தில் பாமக அதிமுகவுக்கு ஆதரவளிக்கவில்லை என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.

2026 தமிழக சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில் அப்போதைய ஆளும் கட்சியான திமுக 2ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அதிமுக 3வது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் திமுக போல அதிமுகவும் ஓரளவு கணிசமான எம்.எல்.ஏ.க்களை பெற்றது. அதே நேரத்தில் அதிமுக வலுவாக இருந்த கொங்கு மண்டலம், தென் மாவட்ட முக்குலத்தோர் வாக்குகள் கைகொடுக்கவில்லை. ஆனால் அதிமுக வட மாவட்டங்களில் முற்றிலும் சரிவைச் சந்திக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் வாக்கு வங்கி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதிமுக வெற்றி பெற்ற பல தொகுதிகளில், பாமக வலுவாக உள்ள பகுதிகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. சுமார் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாமகவின் கோர் வாக்கு வங்கியான வன்னியர் வாக்குகள் கை கொடுத்தன

குறிப்பாக வடதமிழகத்தில், வன்னியர் சமூக வாக்குகள் ஒருங்கிணைந்து அதிமுகக்கு சென்றதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். பாமகவின் வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைக்கப்பட்டதால், அதிமுக பல இடங்களில் வெற்றி பெற முடிந்தது. திருத்தணி, செய்யாறு, மதுராந்தகம், ஆற்காடு, ஜோலார்பேட்டை, பாலக்கோடு, அரூர், செங்கம், ஆரணி, மயிலம் போன்ற பல வடதமிழக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற பாமக வாக்கு வங்கி முக்கிய காரணமாக இருந்தது.

அதே நேரத்தில் பாமக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுகவினர் முழுமையாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதனால் தான் 4 தொகுதிகளில் மட்டுமே பாமக வென்றது. ஒருவேளை அதிமுகவினரை எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக வேலை பார்க்க வைத்திருந்தால் பாமக கூடுதல் தொகுதிகளில் வென்று இருக்கும் என்பது பாமகவினரின் வாதம். மேலும் தேர்தலின் போது உறுதி அளிக்கப்பட்ட சில 'வாக்குறுதிகளை' எடப்பாடி பழனிச்சாமி செய்யவில்லை.

அது மட்டும் அல்லாமல் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் உறுதியான பிரச்சாரத்தையும் எடப்பாடி மேற்கொள்ளவில்லை என்பதால் தான் பாமக சில இடங்களில் தோற்க நேரிட்டது. தங்கள் வாக்குகளை பாமக முழுமையாக அதிமுகவுக்கு கொடுத்த நிலையில், அதிமுக வாக்குகள் பாமகவுக்கு வரவில்லை என்பதும் அன்புமணியின் வருத்தத்திற்கு காரணம் என சொல்கின்றனர். இதனால் தான் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் அதிமுகவை நேரம் பார்த்து அடித்துவிட்டார் அன்புமணி என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+