PMK Candidate List: பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பில் திலகபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த நிலையிலி இன்று 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார் அன்புமணி.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு சேலம் (மேற்கு), தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த 18 தொகுதிகளுடன் அன்புமணிக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 25 ஆம் தேதி அன்புமணி அறிவித்தார்.
அதில் கீழ்வேளூர் - ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), அம்பத்தூர் - என்.சேகர் (மாநில துணைத் தலைவர் - முன்னாள் நகர் மன்றத் தலைவர்), செஞ்சி - அ.கணேஷ் குமார் (இளைஞரணி தலைவர் - முன்னாள் எம்எல்ஏ) ஆகிய 3 பேரை வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அன்புமணி இன்று காலை அறிவித்தார். விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவை எதிர்க்கும் பாமக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
தற்போது 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.
பெரம்பூர்- திலகபாமா
தருமபுரி- சவுமியா
உத்திரமேரூர்- மகேஷ்குமார்
ரிஷிவந்தியம்- செழியன்
காட்டுமன்னார்கோவில்- அன்பு. சோழன்
விருத்தாசலம்- தமிழரசி ஆதிமூலம்
சேலம் மேற்கு- கார்த்தி
பென்னாகரம்- பாடி வெ.செல்வம்
போரூர்- சி.ஆர்.பாஸ்கரன்
திருப்போரூர்- வழக்கறிஞர் கே.பாலு
ஜெயங்கொண்டம்- வைத்தி
சேலம் வடக்கு- சதாசிவம்
விக்கிரவாண்டி- சி.சிவக்குமார்
சோளிங்கர்- வழக்கறிஞர் க.சரவணன்
மயிலாடுதுறை- சித்தமல்லி ஏ.பழனிசாமி
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவர் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அது போல் ஸ்டார் தொகுதி என சொல்லப்படும் பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து திலகபாமா போட்டியிடுகிறார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அது போல் வழக்கறிஞர் பாலு திருப்போரூரில் களமிறங்குகிறார். அங்கு திமுக கூட்டணி கட்சியான விசிகவின் பன்னீர் தாஸ் போட்டியிடுகிறார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications