பெண்களை வேட்டையாடிய மிருகங்கள் தண்டிக்க தகுதியானவர்கள்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்
சென்னை: பெண்களை சீரழித்த மிருகங்களை தண்டிப்பதே சரி என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பகுதியில் வக்கிரத்தில் வார்த்தெடுக்கப்பட்ட கும்பலால் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், அதைத் தொடர்ந்து மிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் இரக்கம் காட்டப்பட தகுதியற்றவர்கள்; தண்டிக்கப்படுவதற்கே தகுதியானவர்கள்.
Also Read | Pollachi News: பொள்ளாச்சி பயங்கரம்.. விடை கிடைக்காத கேள்விகள்.. என்னவோ தப்பா இருக்குதே

அரங்கேற்றம்
பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவன் தலைமையிலான கும்பல்தான் கற்பனையில் கூட சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாலியல் வக்கிரங்களையும், கொடூரங்களையும் அரங்கேற்றி உள்ளது.

செய்திகள்
முகநூல் மூலம் தோழிகள் ஆனவர்கள், நண்பர்களின் உறவினர்கள், வலிமையான பின்னணி இல்லாத எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை இலக்கு வைத்து பழகி, காதல் ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அதை படம் பிடித்து வைத்துக் கொண்டு அதையே காட்டி பணம் பறித்தல், மீண்டும், மீண்டும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்குதல் உள்ளிட்ட குற்றங்களை இந்த கும்பல் அரங்கேற்றியிருப்பதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

கொடூரங்கள்
சகோதரிகளாக பார்க்க வேண்டிய பெண்களை மிருகங்களாக மாறி சிதைத்த இவர்களிடம் கருணை காட்டக்கூடாது. இதற்குக் காரணமாக திருநாவுக்கரசு என்பவன் உள்ளிட்ட நால்வரை காவல்துறை கைது செய்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமே இந்தக் கொடூரங்களை அரங்கேற்றியிருக்க முடியாது.

தண்டனை
இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த பாலியல் குற்றங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுடன், கடுமையான தண்டனையையும் பெற்றுத் தர வேண்டும் என தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications