ஒயிட் & ஓயிட் சீருடை! திமுக இளைஞரணிக்கு போட்டியாக பாட்டாளி இளைஞர் சங்கம்! அன்புமணி நடத்திய கூட்டம்
சென்னை: பாட்டாளி இளைஞர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
திமுக இளைஞரணி நிர்வாகிகளை போலவே பாட்டாளி இளைஞர் சங்கத்தினர் ஒயிட் அண்ட் ஒயிட் சீருடையில் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கட்சியில் புதிதாக அதிகளவு இளைஞர்களை இணைக்க வேண்டும் என்ற அஜெண்டாவோடு நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத்தை ஆக்டிவாக இயங்க வைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணிக்கு போட்டியாக பாட்டாளி இளைஞர் சங்கத்தில் அதிகளவு உறுப்பினர்களை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாமகவின் கொள்கைகள், செயல் திட்டங்களை பாமர மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என இளைஞர் படையை கேட்டுக்கொண்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
பாமக இளைஞரணியில் உழைப்பவர்களுக்கு கட்சியிலும், தேர்தலிலும் நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கு என பூஸ்ட் அப் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அன்புமணி ராமதாஸே இளைஞரணியில் இருந்து தான் பாமக தலைவராக உயர்ந்தவர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாமக என்றாலே அது வட தமிழ்நாட்டு கட்சி என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பாமக அமைப்பை வலிமையாக கட்டமைக்கும் திட்டத்தில் இருக்கும் அன்புமணி, இப்போது தென் மாவட்டங்களுக்கும் அதிகம் சுற்றுப்பயணம் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications