டெல்லிக்கு பறந்த அன்புமணி! ‘அவரை’ பார்த்தாரா? யானையில் ஊர்வலம் போனவராச்சே! அடுத்த ஆக்சனுக்கு தயார்!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு தான் அதிகாரம் இருக்கிறது என தேர்தல் ஆணையத்தில் வாதத்தை முன்வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் ஆலோசகரும் பாமக முன்னாள் எம்எல்ஏவுமான பண்ருட்டி ராமச்சந்திரனை டெல்லி பயணத்துக்கு முன்பாக அன்புமணி சந்தித்து பேசி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது பாமக உட்கட்சி விவகாரம். மருத்துவரான தனது மகனை அரசியலுக்கு அழைத்து வந்து மத்திய அமைச்சராக்கியவர் ராமதாஸ். தொடர்ந்து கட்சியின் எதிர்காலம் கருதி நீண்ட நாட்களாக தலைவராக இருந்த ஜிகே மணியை நீக்கிவிட்டு அன்புமணியை அந்த பதவியில் அமர்த்தினார்.
தொடர்ந்து கட்சியின் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அன்புமணி ராமதாஸ் தான் முடிவெடுத்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தந்தை மகன் இடையே மோதல் வலுத்து வருகிறது. உச்சபட்சமாக அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் செயல் தலைவராக அவரை நியமிப்பதாக கூறியதோடு தானே கட்சியின் தலைவராக தொடர்வேன் என கூறி அதிர வைத்தார்.

இதனால் கட்சி தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்தடுத்து பல நிகழ்வுகளில் ராமதாஸின் பேச்சு அன்புமணியை நோக்கியே இருந்தது. வியாழக்கிழமைகளில் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்த ராமதாஸ், அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது ஒரு புறம் இருக்க கட்சி நிர்வாகிகளையும் தூக்கி அடித்தார் ராமதாஸ். பாமக பொருளாளர் திலகபாமா தொடங்கி திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் வரை ராமதாஸின் அதிரடிக்கு இறையாயினர் பல முக்கிய தலைகள்.
இது ஒருபுறம் இருக்க பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நான் நியமிப்பவர்களே கட்சியின் நிர்வாகிகளாக தொடர்வார்கள், ராமதாஸின் நியமனம் செல்லாது என அன்புமணி கூறியிருக்கிறார். இப்படி பரபரப்பான சூழல் அரங்கேறி இருக்க அன்புமணி ராமதாஸின் டெல்லி பயணம் கவனத்தைப் பெற்று இருக்கிறது. நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார் அன்புமணி ராமதாஸ். அவரது பயணம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடவே அன்புமணி டெல்லி சென்றுள்ளதாக கூறுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தன்னை நீக்கியது செல்லாது எனவும், நிர்வாகிகளை நீக்கியதும் செல்லாது என முறையிடவே அன்புமணி ராமதாஸ் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் பயணத்தின் பின்னணியில் முக்கிய அரசியல் புள்ளி இருப்பதாக சொல்கின்றனர். அதாவது டெல்லி பயணத்திற்கு முன்பாக அன்புமணி ராமதாஸ் ஓபிஎஸ் அணியில் இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பண்ருட்டி ராமச்சந்திரன் தான் பாமகவின் முதல் சட்டமன்ற உறுப்பினர் என்பது பலருக்கும் தெரியாது. அப்போது பாமகவுக்கு மாம்பழம் சின்னம் இல்லை. யானை சின்னம் தான் இருந்தது.
அதில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் தான் ராமச்சந்திரன். அதற்குப் பிறகு அதிமுக, தேமுதிக, தற்போது ஓபிஎஸ் அணி பயணம் என அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டாலும் பாமக உடன் நல்ல தொடர்பில்தான் இருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். குறிப்பாக அன்புமணி ராமதாஸுடன் பல்வேறு அரசியல் விவகாரங்களில் தொடர்பில் இருப்பதாக சொல்கின்றனர் பாமகவினர்.
இந்த நிலையில் கடந்த காலங்களில் எடப்பாடி ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட போது தேர்தல் ஆணையத்தில் வாதங்களை முன் வைத்ததில் பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனைகள் வெகுவாக கை கொடுத்தது. அந்த அடிப்படையில் தான் தற்போது அன்புமணி ராமதாஸ், பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தில் எந்த மாதிரியான வாதங்களை முன்வைக்க வேண்டும், அடுத்த கட்ட நடவடிக்கைகள், அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை பண்ருட்டி ராமச்சந்திரன் வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
-
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications