அதிமுகவுடன் பாமக கூட்டணி என்பது வதந்தி.. அன்புமணி ராமதாஸ் சொன்ன வார்த்தை! உற்று கவனிக்கும் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடன் பாமக கூட்டணி என்று வதந்தி பரப்ப வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்குவதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடங்கி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக. கூட்டணியில் 7 தொகுதிகளில் பா.ம.க போட்டியிட்டது. ஆனால், ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

Anbumani Ramadoss said not to spread rumours about PMK alliance with AIADMK


2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது பாமக. இதைத்தொடர்ந்து, இந்த முறை கூட்டணியா, தனித்துப் போட்டியா என பாமக தீவிரமாக ஆலோசித்து வந்தது. அண்மையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பாமக தீர்மானித்தது.

தைலாபுரத்தில் சிவி சண்முகம்: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். இந்நிலையில், பாமக, பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் இந்தச் சந்திப்பின்போது கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. மேலும், அதிமுக கூட்டணியில் பாமக இணைவது உறுதியாகி விட்டதாகவும் தகவல்கள் பரவின. எனினும், இன்னும் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அப்பாவிற்கு அதிமுக.. மகனுக்கு பாஜக.. பாமக உள்ளே ஒரே களேபரம்.. ராமதாஸ் vs அன்புமணி.. என்ன நடக்குது?

அதிமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி: இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அதிமுகவுடன் பாமக கூட்டணி என்று வதந்தி பரப்ப வேண்டாம். அதிமுக உட்பட யாரோடும் நாங்கள் இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. அதிமுக உடன், பாஜக உடன் எல்லாம் கூட்டணியை உறுதி செய்துவிட்டதாக ஊடகங்கள் வதந்திகளை வெளியிட வேண்டாம்.

கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். அது யார் என இப்போது சொல்ல முடியாது. தற்போது வரை யாருடனும் கூட்டணி உறுதியாகவில்லை. லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பான பா.ம.க நிலைப்பாட்டை நாங்கள் விரைவில் தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக பக்கம் அன்புமணி?: நேற்று தமாகா தலைவர் ஜிகே வாசன், அன்புமணி ராமதாஸை சந்தித்துப் பேசியுள்ளார். அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில், ஜிகே வாசனின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தான், அதிமுக உடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி என்றும், சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+