"உருளும்" பிடிஆர் தலை.. பின்னாடியே வரும் பிஜேபி.. குறுக்கே வந்த அன்புமணி.. பாயிண்ட்டை பிடிச்சிட்டாரு
சென்னை: நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக, 2வது ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பிவரும் நிலையில், அதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.. அத்துடன் திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது என்று கூறி கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
இந்த ஆடியோ தான் பேசியது இல்லை என்று பிடிஆர் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று 2 வது ஆடியோவையும் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார்.
கர்நாடக தேர்தல் களத்தில் பிஸியாக இருந்தபோதும்கூட, தமிழக அரசியலில் ஒரு கண் வைத்தபடியே இருக்கிறார் அண்ணாமலை.. 'பிடிஆர் டேப்-2' என்ற தலைப்பில் இந்த ஆடியோவை ரிலீஸ் செய்திருக்கிறார். வழக்கம்போல ஆங்கிலம் மற்றும் தமிழ் சப்டைட்டிலுடன் இந்த குரல் பதிவும் வெளியாகி உள்ளது... இந்த ஆடியோ மொத்தம் 57 நொடி ஓடுகிறது..

அமைச்சர்கள்: "எனக்கு பாஜகவிடம் பிடித்த விஷயமே, ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைதான். கட்சியையும் மக்களையும் பாத்துக்கொள்ளும் பொறுப்பு தனித்தனியே இருக்க வேண்டும். இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும்தான் எடுக்கிறார்கள்.. நிதி மேலாண்மை செய்வது எளிது. இதெல்லாம் ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள்.. இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும்தான்.. இப்போது நான் பதவியில் இருந்து விலகினால் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும்" என்றெல்லாம் அதில் பதிவாகியுள்ளது.
ஆடியோ லீக்: மிக நீண்ட உரையாடலில், மிக நுணுக்கமாக எடிட் செய்யப்பட்டிருக்கும் பகுதிகள் மட்டுமே, இந்த ஆடியோவில் துண்டுத்துண்டாக வெளியாகி வருகின்றன... இதன் தொடர்ச்சியாக இனிமேல் அடுத்தடுத்து வரும் என்றும் தெரிகிறது.. இந்த ஆடியோவை பொறுத்தவரை திமுக குடும்பத்துக்கு எதிராகவும், பாஜக தரப்புக்கு ஆதரவாகவும் நின்று பேசுவது போலவும் பதிவாகி உள்ளதாக சொல்கிறார்கள்.. இதற்கான விளக்கத்தை திமுக தரப்பு இதுவரை தரவில்லை.. ஆனால், பிடிஆர் மட்டும், இப்போது மறுபடியும் இந்த ஆடியோ விவகாரத்துக்கு மறுப்பு தெரிவித்து, விளக்கம் தந்துள்ளார்.

பிடிஆர் விளக்கம்: அதில், "பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்... திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்? நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் திரு. சபரீசன் அவர்கள். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன என்றெல்லாம் மிக நீண்ட விளக்கம் ஒன்றையும் அளித்திருக்கிறார்.

அன்புமணி பேட்டி: இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பிடிஆரின் ஆடியோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு அன்புமணி, "இது முதலில் அவர் பேசினாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்தணும்.. அவரும் இதற்கு ஒத்துழைக்கணும்.. அரசும் ஒத்துழைக்கணும்.. ஏற்கனவே பிடிஆர், ஆடியோவுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.. "நான் ஆடியோவில் பேசவில்லை, அது என்னுடைய குரலே கிடையாது, இப்போதுள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி ஏதோ செய்திருக்கிறார்கள்" என்றார்..
அதனால், அந்த ஆடியோவை உறுதிசெய்ய வேண்டும்.. அப்படி பிடிஆர்தான் பேசியிருந்தார் என்றால், அவர் அதற்கு நிச்சயம் விளக்கம் தர வேண்டும்.. அப்படி அவர் பேசவில்லை என்றால், அது போலியான ஆடியோ என்றால், யார் பரப்பி விடுகிறார்களோ, அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கணும்.. யார் தப்பு செய்தாலும் சரி, நடவடிக்கை எடுக்கணும்.. திமுக மீது அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.. ஆனால், குற்றச்சாட்டு என்பது நிரூபணம் செய்ய வேணடும்.. இப்படித்தான், 2ஜி-யை சொன்னார்கள்.. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடின்னு சொன்னாங்க.. கடைசியில் யாருமே குற்றவாளி இல்லைன்னு சொல்லிட்டாங்க..
நிரூபிக்க வேண்டும்: அதனால் குற்றச்சாட்டை ஒருவர் வைப்பது பெரிது கிடையாது.. ஆனால், அது உண்மையாக இருக்க வேண்டும்.. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும்.. அப்படி நிரூபணமானால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.. நான் முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்வது என்னவென்றால், மதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கொண்டு வரவேண்டும்.. காரணம், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது.. அதனால், உடனடியாக அந்த சந்தேகத்தை போக்கி, இது மக்களுக்கான அரசுதான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications