அரசியல் சூழல் மாறும்.. விஜயகாந்தை சந்தித்ததும் அன்புமணி கொடுத்த க்ரீன் சிக்னல்! அப்போ அதுதானா?
சென்னை: வருங்காலத்தில் அரசியலில் சூழ்நிலை மாறும், அதற்கேற்றார் போல் தங்கள் அரசியல் பயணமும் இருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தார்.

அன்புமணி ராமதாஸ்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், தமிழ்நாட்டு அரசியலில் தைரியமாக மக்களை திரட்டி அரசியல் செய்து வருகிறார் விஜயகாந்த். அதனடிப்படையில் அவரை சந்தித்தேன். இது நட்பு ரீதியான ஒரு சந்திப்பு. அவர் மீது தனிப்பட்ட மரியாதை தனக்கு உள்ளது.

வருங்காலம்
வருங்காலத்தில் அரசியலில் சூழ்நிலை மாறும், அதற்கேற்றார் போல் எங்கள் அரசியல் பயணமும் இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள கல்வி தரம் மேலும் உயர வேண்டும். பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது கல்வியின் அடித்தளமே சரியாக இல்லை.

நீட் தேர்வு
நீட் தேர்வில் நம்பிக்கை இல்லாததால் தான் தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. போட்டி போடுகிற தன்மை மாணவர்களிடம் இல்லாத சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி கல்வி வணிகமாக மாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தரமான கல்வியையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2026 ஆண்டுதான் இலக்கு
அதேபோல் 2026 தான் தங்களுடைய இலக்கு என்று கூறிய அன்புமணி, எங்களுடைய ஆட்சி தனிப்பட்ட ஆட்சியாக இருக்காது, கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும். எங்கள் கொள்கையுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். அதேபோன்று, 2024 நாடாளுமன்ற தேர்தலும், 2026 தேர்தலுக்கான யுக்திகளை வகுக்கும் வகையில் முடிவு எடுப்போம் என்று கூறினார்.

கூட்டணி
அரசியல் சூழல் மாறும். அதற்கேற்றார் போல் எங்கள் அரசியல் பயணமும் இருக்கும் என அன்புமணி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் நிறைய கசப்பான சூழல் இருந்த நிலையில் தற்போது அவர் கூறியது 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி உருவாகும் என தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications