அதிமுகவால் இழந்ததே அதிகம்.. புகார் பட்டியல் வாசித்த பாமக நிர்வாகிகள்.. அன்புமணி அறிவிப்பின் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்திருப்பதன் பின்னணி என்ன என்பது தெரிய வந்துள்ளது. அதிமுக குறித்த புகார் பட்டியலை பாமக நிர்வாகிகள் வாசித்ததோடு, அதிமுக கூட்டணியால் பெற்றதை விடவும் இழந்ததே அதிகம் என்று கூறி இருக்கின்றனர். இதனால் அன்புமணி அடுத்தக்கட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் இறங்கி இருக்கின்றன. இதில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற பாமகவின் ஆதரவை பெற அதிமுக தீவிரமாக இருந்தது. ஆனால் அன்புமணி அதிமுகவை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை.

Anbumani

2016 சட்டசபைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தனித்து நின்றே பாமக 9% வாக்குகளை பெற்றது. 2021 மற்றும் 2026 ஆகிய சட்டசபைத் தேர்தலில் அதிமுக வென்றதற்கு பாமக உடனான கூட்டணியே முக்கிய காரணம். இதனால் பாமக ஆதரவை கைப்பற்ற பல்வேறு கட்சிகளும் தீவிரமாக இருந்தன. இந்த நிலையில் நேற்று அன்புமணி, இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவும் கிடையாது என்று திடீரென அறிவித்துவிட்டார்.

இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதனால் வன்னியர்களின் வாக்குகள் எந்தப் பக்கம் சாயும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே பாமக ஆதரவு வாக்குகள் செல்லும் என்று கருதப்படுகிறது. இதனிடையே அன்புமணி திடீரென அதிமுக உடனான உறவில் இருந்து விலகும் முடிவை எடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதுதொடர்பாக விசாரிக்கையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அதன்படி, அன்புமணி அறிவிப்பின் பின்னணியில் அதிமுக மீதான கோபமாக காரணம் என்று தெரிகிறது. பாமக மாவட்டச் செயலாளர்களும் அதிமுக குறித்து பல்வேறு புகார் பட்டியலை வாசித்துள்ளனர்.

மாவட்டச் செயலாளர்களுக்கு மதிப்பளித்து அதிமுகவை அன்புமணி ஆதரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதிமுக வென்ற 47 இடங்களில் 36 இடங்கள் பாமக வலுவாக இருக்கும் இடங்கள். சேகம் மாவட்டத்தில் பாமக போட்டியிட்ட மேற்கு மற்றும் வடக்கு தொகுதியில் பாமக தோல்வி அடைந்தது. ஒருவேளை அதிமுகவின் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால், பாமக எளிதாக அங்கு வென்றிருக்கும் என்று கூறியுள்ளனர்.

இறுதியாக அதிமுக உடனான கூட்டணியால் பாமக லாபம் அடைந்ததை விடவும் இழந்ததே அதிகம் என்று வெளிப்படையாக கூறி இருக்கின்றனர். இதனை கேட்டு கொண்ட அன்புமணி ராமதாஸ், அதிமுக உடனான கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் விசிக இருக்கும் தவெக கூட்டணியில் பாமக இணையுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+