அன்புமணி மனைவியிடம் இத்தனை கோடி வைரமா? திருச்சி சிவா சொத்து மதிப்பு இவ்வளவா? கிலோ கணக்கில் தங்க நகை
சென்னை: தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் தேர்தல் பிரமாண பத்திரங்கள் எப்போதும் பொதுமக்களிடையே பெரும் பேசுபொருளாகவே அமைகின்றன.. குறிப்பாக மக்கள் பணியாற்றும் தலைவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை அறியும் ஆர்வம் வாக்காளர்களிடையே எப்போதுமே அதிகமாக இருக்கும்.. அந்த வகையில் இப்போதும் தலைவர்களின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. இந்த சொத்துக்கள் வழக்கம்போல் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள திமுக, அதிமுக, தேமுதிக, பாமக வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களை பிரமாண பத்திரங்களாக தாக்கல் செய்துள்ளனர்..
இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த விவரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன..

அன்புமணி ராமதாஸ் சொத்து
பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி, அவரிடம் 1.52 கோடி ரூபாயும், அவரது மனைவி சவுமியாவிடம் 16.85 கோடி ரூபாயும், மகளிடம் 93.82 லட்சம் ரூபாயும் என மொத்தம் 19.32 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன..
அசையா சொத்துக்களை பொறுத்தவரை அன்புமணி பெயரில் 6.85 லட்சம் ரூபாயும், அவரது மனைவி சவுமியா பெயரில் 48.79 கோடி ரூபாயும் என மொத்தம் 48.85 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.. அன்புமணியின் மனைவி மற்றும் மகள்கள் பெயரில் ஒட்டுமொத்தமாக 68.17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது..
தங்க நகைகள்
மேலும் தங்க நகைகளைப் பொறுத்தவரை அன்புமணியிடம் 960 கிராம், சவுமியாவிடம் 2,927 கிராம் மற்றும் மகளிடம் 551.80 கிராம் நகைகள் உள்ளன..
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக சவுமியாவிடம் 1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 151.51 காரட் வைரங்களும், மகளிடம் 4.34 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சவுமியா பெயரில் 8.99 கோடி ரூபாய் கடன் இருப்பதும், அன்புமணி மீது மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதும் பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
திருச்சி சிவா பிரமாண பத்திரம்
அதேபோல திமுக வேட்பாளர் திருச்சி சிவா தனது பிரமாண பத்திரத்தில் கையிருப்பில் 6 லட்சம் ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.. அசையும் சொத்துகளாக அவரது பெயரில் 2 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரத்து 441 ரூபாயும், அவரது குடும்பத்தினர் பெயரில் 72 லட்சத்து 75 ஆயிரத்து 663 ரூபாயும் உள்ளன..
அசையா சொத்துக்களை பொறுத்தவரை அவரது பெயரில் 3 கோடியே 86 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், மனைவி பெயரில் 73 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும், குடும்பத்தினர் பெயரில் 23 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும் சொத்துக்கள் உள்ளன..
அசையும், அசையா சொத்துக்கள்
இவருக்கு 224 கிராம் தங்க நகைகளும், வங்கி மற்றும் தனி நபர்களுக்குச் செலுத்த வேண்டிய 1.06 கோடி ரூபாய் கடனும் உள்ளது.. வருமான வரித்துறைக்கு 3.04 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ள இவரது மொத்த சொத்து மதிப்பு 7.75 கோடி ரூபாயாகும்..
இவ்வாறு முக்கிய வேட்பாளர்களின் பல கோடி ரூபாய் சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி அரசியல் களத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளன...!!












Click it and Unblock the Notifications