ஒரே ஒரு கல்தான்.. மனித குல வரலாற்றையே புரட்டி போட போகிறது.. உறைந்த ஆராய்ச்சியாளர்கள்! என்ன நடந்தது?
சென்னை: கனடாவில் செய்யப்பட்ட ஆராய்ச்சி ஒன்று இதுவரை நாம் இந்த பூமி பற்றி அறிந்து வைத்து இருந்த விஷயங்களை எல்லாம் மொத்தமாக புரட்டி போட போவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
பூமி தோன்றி பல பில்லியன் ஆண்டுகள் ஆகி இருந்தாலும்.. இதுவரை மனிதர்கள் கணக்குப்படி 3.46 பில்லியன் வருடத்திற்கு முன்புதான் முதல் உயிரினம் பூமியில் தோன்றியது. அந்த உயிரினம் ஒரு பாக்டீரியா.
அதாவது பூமியில் மனிதர்களுக்கு தெரிந்தவரை முதல் உயிரினம் வாழ்ந்தது 3.46 பில்லியன் வருடங்களுக்கு முன். அதற்கு முந்தைய காலத்தில் பூமியில் உயிரினம் இருந்ததற்கான எந்த ஆதாரமும்.. இதுவரை கிடைக்காமல் இருந்தது.. கொஞ்சம் வெயிட்.. இப்போது கிடைத்துவிட்டது!

என்ன நடந்தது?
முன்னதாக மேற்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த பாறை படிமங்களில்தான்பாக்டீரியா இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. அந்த பாக்டீரியா வாழ்ந்தது 3.46 பில்லியன் வருடங்களுக்கு முன். இதைத்தான் இத்தனை வருடம் உலகம் நம்பிக்கொண்டு இருந்தது. இந்த நிலையில் கனடாவில் கண்டெடுக்கப்பட்ட பாறை படிமங்கள் சிலவற்றில் அதை விட பழைய பாக்டீரியா இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்துள்ளன.

எத்தனை வருடம்
அதாவது 4.28 பில்லியன் வருடங்கள் பழமையான பாக்டீரியா பாறை ஒன்றில் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பாறை படிமத்தில் இருந்த பாக்டீரியா 4.28 பில்லியன் வருடம் முந்தையது என்பதற்கான சில அடையாளங்கள் அதில் இருந்துள்ளன. அதில் சில முடிச்சுகள், கோடுகள், வளையங்கள் இருந்துள்ளது. இதை வைத்து அந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் 2017ல் செய்யப்பட்டாலும் அதை உலக வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் நம்பவில்லை.

மாற்றம்
அந்த கோடு, முடிச்சுகள் எல்லாம் பாக்டீரியா மூலம் ஏற்பட்டதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை கெமிக்கல் ரியாக்சனாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது அதே பாறை படிமத்தில் லண்டன் அறிவியல் கல்லூரி ஆய்வு நடத்தி உள்ளது. அதில் இந்த பாறையில் பாக்டீரியா இருந்ததை உறுதி செய்துள்ளனர். அதில் மரங்களின் வேர்களில், தண்டுகளில் இருப்பது போன்ற கிளை கிளையான தோற்றம் காணப்பட்டுள்ளது.

பாக்டீரியா
பாக்டீரியா உள்ளே இது போன்ற தோற்றம் காணப்படும். இதை வைத்து அந்த பாறையில் பாக்டீரியா இருந்ததை உறுதி செய்துள்ளனர். அவை கெமிக்கல் ரியாக்சன் மூலம் உருவாக கூடியது அல்ல. அவை பாக்டீரியாதான். இவை கடல் பகுதிக்கு அருகில் இருந்த பாக்டீரியாவாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவை மொத்தமாக 4.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த பாக்டீரியா படிமத்தில் இன்னும் பல வித்தியாசமான தோற்றங்கள் இருக்கின்றன. இதனால் இது கண்டிப்பாக பாக்டீரியாதான் என்று ஆராய்ச்சி முடிவில் தெரிவித்துள்ளனர்.

ஒரே கல்
இந்த ஒரே ஒரு பாறை கல்லால் மனித குல வரலாற்றில் நாம் இத்தனை ஆண்டுகள் நம்பிக்கொண்டு இருந்த பல விஷயங்கள் மாறப்போகிறது. அதன்படி பூமி உருவாகி பெரும்பாலும் வெறும் 300 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியில் உயிரினம் (பாக்டீரியா ) உருவாகி இருக்கலாம் என்று புதிய தியரி கொண்டு வரப்பட்டுள்ளது. நாம் நினைத்ததை விட அதிக வேகம் இது. இதுதான் பழைய பாக்டீரியாவா.. இல்லை அதற்கு முன்பும் பாக்டீரியா உலகில் இருந்ததா என்ற ஆராய்ச்சியில் வல்லுனர்கள் தற்போது இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications