ஆந்திராவில் அள்ளிட்டு வந்த CM விஜய்! சென்னைக்கு 3 TMC கிருஷ்ணா நதிநீர்! சந்திரபாபு கொடுத்த சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஆந்திரா சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். ஆந்திராவில் பற்றாக்குறை இருந்தாலும் கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர் வழங்குவோம் என சந்திரபாபு நாயுடு சொல்லியிருந்தார். இந்த நிலையில் வரும் இரண்டரை மாதங்களுக்குள் 3 டிஎம்சி நீரை சென்னைக்கு ஆந்திர அரசு வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்துக்கு உரிய நீர் தர கர்நாடகா மறுத்து வரும் நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதியின் மூலம் சென்னை குடிநீர் பெற்று வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் விவகாரம் தொடர்பாக பேச இன்று ஒரு நாள் பயணமாக இன்று தமிழக முதலமைச்சர் விஜய் ஆந்திராவுக்கு சென்றார்.

Vijay Chandrababu Naidu Krishna River

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜயவாடா சென்று அவருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள கனகதுர்கா கோவிலுக்கு சென்ற முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக அவருக்கு மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பின்பு அமராவதியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்குச் சென்ற முதல்வர் விஜய் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையுன் போது கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதிநீர் குறித்தும், கோதாவரி கிருஷ்ணா காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் சந்திரபாபு நாயுடு உடன் முதல்வர் விஜய் ஆலோசித்ததாக தகவல் வெளியானது.

தொடர்ந்து விஜயவாடாவில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழகத்துக்கு உரிய நீர் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னைக்கு அடுத்த இரண்டரை மாதங்களில் மூன்று டி.எம்.சி நீரை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ன தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையின் குடிநீர் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+