ஹனிமூனுக்கு போன ரங்கசாமி.. கோவாவில் செம ஜாலி.. திடீரென சுற்றி வளைத்த போலீஸ்.. என்ன காரணம்?
பெண்களை ஏமாற்றி பணம் பறித்த இளைஞரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை: கோவாவில் ஹனிமூனில் இருந்த ஒரு இளைஞனை சுற்றி வளைத்துள்ளது ஆந்திர போலீஸ்.. இதனால், அனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது..!
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி.. இவருக்கு வேலை வெட்டி எதுவும் இல்லை.. வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருந்ததால், பெற்றோர் சத்தம் போட்டுள்ளனர்..
அதனால், வேலை தேடி வருவதாக சொல்லிவிட்டு, ஐதராபாத்தில் உள்ள லாலகுடா பகுதிக்கு சென்றுள்ளார்.. ஒரு ரூம் எடுத்து தங்கினார்.. ஆனால், வேலை தேடவில்லை.

காதல்
அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு காதல் வலை வீச ஆரம்பித்தார்.. அதுவும் கல்யாணம் ஆன பெண்களையே குறி வைத்தார்.. அவர்கள் நன்கு அறிமுகமானதும், காசு பறித்து கொண்டு மோசடி செய்து வருவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார். ரங்கசாமி நன்றாக ஜோக் அடிப்பாராம்.. பெண்களிடம் சிரிக்க சிரிக்க பேசுவாராம்.. பல நேரங்களில் அப்பாவி போலவும் நடந்து கொள்வாராம்..

காதல்
இதனால் எத்தனையோ பெண்கள் ஏமாந்துள்ளனர்.. பரிதாபப்பட்டு அன்பு காட்டி நட்புடன் பழகி உள்ளனர்.. நாளடைவில் அவர்களின் வீடுகளுக்கு சென்று உரிமையுடன் பேசும் அளவுக்கு நட்பை வளர்த்து கொள்வாராம்.. அதுமட்டுமல்ல, அந்த பெண்களின் டிரஸ்களை எடுத்து அணிந்து கொள்வாராம்.. அவர்களை போலவே மேக்கப்பும் போட்டுக் கொண்டு , லேடி கெட்டப்பில் வந்து நின்றால், சிரிக்காத பெண்களும் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்களாம். இதுதான் ரங்கசாமியின் டெக்னிக்.

நெருக்கம்
இதற்குபிறகு காதல், நெருக்கம்.. போட்டோ, வீடியோ, மிரட்டல், பணம் கறப்பது என அடுத்தடுத்த வேலைகளை காட்டி உள்ளார் ரங்கசாமி.. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பணம், நகைகளை அவர்களிடமிருந்து மிரட்டி பறித்து கொள்வாராம்.. ஒரு பெண் முடிந்ததும், இன்னொரு பெண்ணை ஏமாற்ற பிளான் போடுவாராம்.. இறுதியில், ரங்கசாமிக்கும் ஒரு பெண் செக் வைத்தார்.. அந்த பெண் லாலகுடாவை சேர்ந்தவர்.. அந்த பெண்ணிடம் இப்படித்தான் வேலை காட்டி உள்ளார்..

குறி
அந்த பெண் ஸ்டிரைட்டாக ஸ்டேஷனுக்கே போய்விட்டார்.. அவர் அளித்த புகாரின் பேரில்தான் ரங்கசாமியின் மொத்த கில்லாடித்தனமும் வெளியே வந்துள்ளது.. இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், வேலைக்கு போகும் பெண்களுக்குதான் ரங்கசாமி குறி வைத்துள்ளார்.. இவர் அந்த பெண்களின் கணவர்களுக்கு சந்தேகம் வரும் அளவுக்கு வேண்டுமென்றே நெருங்கி நெருங்கி பழகுவாராம்..வேண்டுமென்றே நெருங்கி நெருங்கி பழகுவாராம்..

டைவர்ஸ்
உடனே அந்த வீட்டில் தம்பதிக்குள் தகராறு வெடிக்குமாம்.. ரங்கசாமியால், சில பெண்கள் கோர்ட்டில் டைவர்ஸ் வரை சென்றுள்ளனர்.. அப்படி டைவர்ஸ் பெற வைத்து, அந்த பெண்களிடம் பணம் பறித்துள்ளார் லேடி கெட்டப் ரங்கசாமி... இப்போதைக்கு பாதிக்கப்பட்ட 10 பெண்களின் விவரங்களை மட்டுமே போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. இன்னும் நிறைய பெண்கள் ரங்கசாமியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்..

ஹனிமூன்
இதற்கு பிறகு ரங்கசாமியை கைது செய்ய போலீசார் முயன்றனர்.. ஆனால், ரங்கசாமியை காணோம்.. அவரை வலைவீசி தேடும்போதுதான், இன்னொரு பெண்ணை தன் வலையில் சிக்க வைத்து, அவரை அழைத்து கொண்டு கோவாவுக்கு ஹனிமூன் டிரிப் சென்றுள்ளது தெரியவந்தது.. ஹனிமூனில் இருந்த அப்படியே கொத்தோடு அள்ளி கொண்டு போனார்கள் போலீசார்..!
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications