காதலன் பேசாததால் உயிரைவிட்ட ஆந்திர மாணவி.. காஞ்சிபுரம் கல்லூரியில் என்ன நடந்தது?
சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் சங்கரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இங்குள்ள விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். இங்கு விடுதியில் தங்கி படிக்கும் ஆந்திரா கல்லூரி மாணவி எடுத்த தவறான முடிவுக்கு என்ன காரணம்.. மாணவர்கள் போராடியது ஏன் என்பதை பார்ப்போம்.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா வித்யாலயம் எனும் சங்கரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக கல்லூரியில் பொறியியல் படிப்புகளில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் தங்கி படிக்க பல்கலைக்கழக வளாகத்தில் விடுதிகளும் காஞ்சிபுரம் அருகே கல்லூரி வளாகத்திலேயே செயல்படுகிறது.

மாணவிகள் விடுதி தனி அறையில் இ.சி.இ என்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த 19 வயதாகும் நிகிதா (வயது 19) தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாணவியின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் பொன்னேரிகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் பல்கலைக்கழக விடுதிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மாணவி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருப்பதை கண்டனர். உயிரை மாய்த்துக் கொண்டு 3 நாட்கள் வரை ஆனதால் துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. நிகிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி நிகிதாவின் அறையில் தீவிர சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர். போலீசாரின் சோதனையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.
அதில் தான் ஆசையாக காதலித்த காதலன் கடந்த சில நாட்களாக பேசாததால் மனம் உடைந்து தவறான முடிவு எடுத்துள்ளதாக எழுதி இருந்தார். மாணவி நிகிதா உயிரிழந்த சம்பவத்தை அறிந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் சக மாணவ- மாணவிகள் நள்ளிரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நிகிதா எழுதிய கடிதம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Click it and Unblock the Notifications
