பேபிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. இசைப் புயலின் பாராட்டு + ஒரு பட சான்ஸ்!
ஆந்திர பெண் பாடிய பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டி உள்ளார்.
Recommended Video

சென்னை: பேபி...ம்மாவுக்கு அடிச்சது அதிர்ஷ்டம்... ஒரே பாட்டை பாடி ஆஸ்கார் நாயகனிடம் பாராட்டை வாங்கி விட்டார்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியை சேர்ந்தவர்தான் பேபி என்ற பெண்மணி. இவர் ரஹ்மான் இசையில் வெளியான காதலன் திரைப்படத்திலிருந்து என்னவளே பாட்டை தெலுங்கில் பாடியிருந்தார்.
இந்த பாட்டின் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் ரஹ்மான் பதிய.. அது சும்மா பிச்சிக்கிட்டு வைரலாகி வருகிறது.

12 லட்சம்
இந்த வீடியோவை போட்டதுடன், ரஹ்மான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் "யார் எனத் தெரியவில்லை. பெயர் தெரியவில்லை. அருமையான குரல்' எனப் பதிவிட்டுள்ளார். ரஹ்மான் இப்படி கமெண்ட் போட்ட உடனேயே இந்த வீடியோ 12 லட்சத்திற்கும் மேல் ரசிகர்கள் பார்த்துவிட்டனர். அதில், பேபியை பாராட்டுகிறார்களோ இல்லையோ, ரஹ்மானை அதிகமாகவே புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

வாய்ப்பு தரலாமே
ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறோம், கலாரசிகன், திறமையை தேடி பாராட்டும் கலைஞன் என்றெல்லாம் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லை.. பேபிக்கு ஒரு உங்கள் இசையில் ஒரு வாய்ப்பு தரலாமே என்றும் செல்ல கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

பாடல் வாய்ப்பு
ரஹ்மான் வாய்ப்பு தரப்போகிறாரோ இல்லையோ, இந்த வீடியோவை பார்த்த அதனை பார்த்த தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் கோடேஸ்வர ராவ், பேபிக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தந்துள்ளாராம். பொதுவாக இந்த பாட்டு கேட்க இனிமையாக இருக்கும். ஆனால் பாடுவது சிரமம். அதனைதான் எல்லாரையும் மெய்மறக்கும் வகையில் பேபி பாடி உள்ளார்.
கிராமத்து பெண் பேபி
பார்ப்பதற்கு ரொம்பவும் எளிமையாக இருக்கிறார் பேபி. ஒரு வீட்டு திண்ணையில் சாய்ந்து கொண்டு, பக்கத்தில் ஒரு பெயிண்ட் டப்பாவில் தன் கையை வைத்து கொண்டு அநாயசியமாக இந்த பாட்டை பாடுகிறார் கிராமத்து பெண் பேபி. அந்த பகுதி மக்களிடையே எப்பவுமே கிராமிய பாட்டு, சினிமா பாட்டு பாடிக் கொண்டே இருப்பாராம் இவர். அதுபோலதான், என்னவளே பாட்டை பேபி தெலுங்கு வர்ஷனில் பாட, அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications