கள்ளக்குறிச்சி கலவரம்.. அன்றே சொன்னார் ரஜினி.. சமூகவலைதளங்களில் டிரெண்ட்டாக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து கலவரம் நிகழ்ந்த நிலையில் அன்றே சொன்னார் ரஜினிகாந்த் எனும் ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி கலவரம்.. அன்றே சொன்னார் ரஜினி.. சமூகவலைதளங்களில் டிரெண்ட்டாக்கும் ரசிகர்கள்

இதில் பள்ளியின் பேருந்து, வகுப்பறைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. பள்ளியில் பத்திரப்படுத்தப்பட்டிருந்த மாணவர்களின் சான்றிதழ்களும் கொளுத்தப்பட்டன.

278 பேர் கைது

278 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக 20 சிறுவர்கள் உள்பட 278 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னமும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தையே உலுக்கிய இந்த வன்முறை சம்பவத்தை மாணவர்கள் போர்வையில் பல்வேறு அமைப்பினர் இணைந்து திட்டமிட்டு நடத்தியதாக கூறுகிறார்கள்.

 நீதிமன்றம்

நீதிமன்றம்

இதையே தான் நீதிமன்றமும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- கள்ளக்குறிச்சி சம்பவங்களை வைத்து ரஜினி ரசிகர்கள் "அன்றே சொன்னார் ரஜினி" என்றும் "நான் தான்டா ரஜினி", நான்தான்பா ரஜினிகாந்த் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை டிரென்டாக்கி வருகிறார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

அதாவது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் போராட்டத்தை மாவட்ட நிர்வாகத்தினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். அப்போது பொதுமக்கள் போர்வையில் சில சமூகவிரோத கும்பல் வன்முறையை ஏவிவிட்டதாக பரவலாக சொல்லப்பட்டது.

13 பேர் பலி

13 பேர் பலி

இதை தடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்களையும் காயமடைந்தவர்களையும் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்

அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூகவிரோதிகளின் ஊடுருவலே காரணம் என்று ரஜினி கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. போராட்டம் செய்தால் சமூகவிரோதி என கூறுவதாக என ரஜினியை பலர் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் அவர் சொன்னது போலவே தற்போது நடந்து விட்டதாக ரஜினி ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

Recommended Video

    Kallakurichi School Girl மறு பிரேத பரிசோதனை முடிந்தது..அடுத்து என்ன?
    ரஜினி ரசிகர்கள்

    ரஜினி ரசிகர்கள்

    இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் கூறுகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போல கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு நடத்திய போராட்டத்திலும் சமூகவிரோதிகள் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ரஜினி அன்று சொன்ன கருத்து தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு ஒத்துப் போகிறதா ? அன்று போராட்டம் செய்தால் சமூகவிரோதியா என கேட்டவர்கள் எல்லாம் எங்கே என கேள்வி எழுப்புகிறார்கள். அன்றே சொன்னார் ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாஜகவினரும் டிரெண்டாக்குகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+