Vijay Andrea: விஜய் அழைத்தாலும் தவெக பிரச்சாரத்திற்கு போக மாட்டேன்! நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக்!
சென்னை: தவெக தலைவர் விஜய், பிரச்சாரத்திற்கு அழைத்தாலும் போக மாட்டேன். இதை மாஸ்டர் படப்பிடிப்பிலேயே அவரிடம் சொல்லிவிட்டேன் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் பணியாற்றும் சக பேராசிரியர் ரோலில் ஆண்ட்ரியா நடித்திருந்தார்.

நடிகர் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என கடந்த 8 ஆண்டுகளாகவே அவரது ரசிகர்கள் விரும்பினர். அதை விட அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் , தனது மகன் விஜய் அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார்.
அதிலும் முதல்வராக இருந்த ஜெயலலிதா ஆட்சியில் தலைவா படம் குறித்து சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சையை தீர்த்து வைக்குமாறு கொடநாடு எஸ்டேட் வரை விஜய் சென்று அங்கு ஜெயலலிதாவை பார்க்க முடியாமல் ஒரு சாலையில் காத்திருந்து பார்த்ததெல்லாம் பெரும்பாலானோர் அறிந்ததே.
அரசியல் கட்சி
இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை விஜய் தொடங்கினார். இந்த அரசியல் கட்சி அறிவிப்பை தொடர்ந்து "தி கோட்" எனும் திரைப்படம் வெளியானது. அதில் கூட விஜய் வரும் காரின் பதிவு எண் "CM2026" என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனநாயகன்
மேலும் சேம்பைன் என்பதற்கு பதிலாக கேம்பைன் என்ற வார்த்தை ஒரு பாடலில் பயன்படுத்தப்பட்டிருந்தது. விஜய் அரசியலில் முழு நேரமும் ஈடுபடுவதாக அறிவித்த நிலையில் ஜனநாயகன்தான் கடைசி படம் என்பதை அறிவித்திருந்தார். அந்த வகையில் அந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி முதல் விஜய், தமிழகம் எங்கும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். எனினும் கரூரில் ஒரு கசப்பான சம்பவம் நடந்தேறியதால் அவரது பிரச்சாரம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம்
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை வழங்கிய விஜய் அந்த சம்பவத்திற்கு பிறகு, 50 நாட்கள் கழித்து சேலத்தில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் விஜய் நாளை பொதுமக்களை சந்திக்கிறார். இந்த நிகழ்வுக்கு 2000 பேர் மட்டுமே அனுமதி என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரியா வைரல்
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் விஜய் குறித்து கூறியது வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், "விஜய் சினிமாவில் இருந்து வெளியேறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னை கேட்டால், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றுதான் கூறுவேன். அவருடன் நான் "மாஸ்டர்" படத்தில் நடித்துள்ளேன். அப்போது அவர் மிக பெரிய ஸ்டார். வளர்ந்து வரும் நடிகர் எல்லாம் இல்லை. ஆனாலும் எந்த பந்தாவும் இல்லாமல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். மிகவும் எளிமையாக அனைவரும் அணுகும் அளவுக்கு இருப்பார். நல்ல மனிதர்.
கூகுள் கூகுள்
அவருடன் இணைந்து கூகுள் கூகுள் பாடலை பாடியுள்ளேன். "மாஸ்டர்" படத்தின் ஷூட்டிங்கின் போது அவர் என்னிடம் அரசியலில் ஆர்வம் உள்ளதா என கேட்டார். நான் இல்லை என சொல்லிவிட்டேன். ஆனால் அவர் அரசியலில் களமிறங்குவார் என நான் அப்போது நினைக்கவில்லை என ஆண்ட்ரியா கூறியிருந்தார். அது போல் அந்த பேட்டியில், பிரச்சாரத்திற்கு விஜய் உங்களை அழைத்தால் போவீர்களா, என கேட்டதற்கு "ஐய்யய்யோ.. நான் போக மாட்டேன், அதை "மாஸ்டர்" படப்பிடிப்பிலேயே அவரிடம் சொல்லிவிட்டேன்" என்று கூறுகிறார். இவரது இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications