அனிதா வீட்டுக்கெல்லாம் போனாரு.. ஆனா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பா? விஜய்க்கு கிளம்பிய எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மாணவி அனிதாவின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மீதான விமர்சனத்தை அதிகரித்திருக்கிறது. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளதாக அனிதாவின் சகோதரர் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்.1ம் தேதி அனிதா நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு வடிவமாக இதனை மாணவர்கள் பார்க்கின்றனர். இப்படி இருக்கையில், இந்த ஆண்டு நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Anitha Memorial

இது குறித்து அனிதாவின் சகோதரர் பதவிட்டிருப்பதாவது, "தங்கை அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் இன்று. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று நீட் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், மாணவர் அமைப்புகள் சார்பில் தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று மாலை 5 மணிக்கு தங்கை அனிதாவின் நினைவேந்தலை நடத்துவதற்காக, கடந்த 18.08.2026 அன்று சென்னை மாநகராட்சியிடமும், கடந்த 22ஆம் தேதி காவல்துறையிடமும் முறையாக அனுமதி கோரியிருந்தோம். எங்களுடைய கோரிக்கை மிகத் தெளிவானது. 100 முதல் 200 பேர் பங்கேற்கும் அமைதியான மெழுகுவர்த்தி நினைவேந்தல். போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ அல்ல. ஆனால், காவல்துறை எங்களுடைய கோரிக்கையை முறையாகப் பரிசீலிக்காமல், 'ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை' என்று கூறி அனுமதி மறுத்துள்ளது. 'நினைவேந்தல்' என்ற வார்த்தையைக்கூட அவர்கள் பயன்படுத்தவில்லை.

காரணம் என்னவென்றால், அருகில் திருவிழாக்கள் நடைபெறுவதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். உண்மையில் விடுமுறைநாட்களில் வரும் கூட்டத்தில் கால்பகுதி கூட வார‌நாட்களில் கூட்டம் வருவதில்லை. ஆனால், அதே பெசன்ட் நகர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் உணவுத் திருவிழாக்களுக்கும், மாரத்தான் உள்ளிட்ட‌பல்வேறு வணிக மற்றும் பொது நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

100-200 பேர் அமைதியாக ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி, தங்கை அனிதாவை நினைவுகூருவதற்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? நேற்று இரவு 10.30 மணி வரையிலும் எந்தவித முரண்பாடும் வேண்டாம்; அரசுடன் பேசி, அனுமதியுடன் நினைவேந்தலை நடத்த வேண்டும் என்றுதான் நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால், கடைசி வரை எங்களை இழுத்தடித்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது வெறும் அனுமதி மறுப்பு அல்ல. இது எங்களுடைய ஜனநாயக மற்றும் குடிமை உரிமை குறித்த கேள்வி. நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று கூறும் தமிழ்நாடு அரசு, நீட் எதிர்ப்புப் போராட்டத்தின் அடையாளமான தங்கை அனிதாவின் நினைவேந்தலுக்கே அனுமதி மறுப்பது மிகப்பெரிய முரண்பாடு" என்று கூறியிருக்கிறார்.

அனிதா உயிரிழந்தபோது அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று, அக்குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த விஜய், தற்போது முதலமைச்சரானதும் அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+