திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி.. கேஎன் நேரு மூலம் காய் நகர்த்தும் அனிதா ராதாகிருஷ்ணன்! நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்காக காய் நகர்த்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் 70 வயதை கடந்துவிட்ட சூழலில் மாவட்டச் செயலாளர் பதவியை பறி கொடுப்பதால், துணைப் பொதுச்செயலாளர் பதவியை கேட்டு வருவதாக தெரிகிறது. இதற்காக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மூலமாக பேசி வருவதும் தெரிய வந்துள்ளது.

திமுகவில் மறுசீரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் 78ல் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 110ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துவிட்டார். தொடர்ந்து அடுத்த 15 நாட்களுக்குள் கிளை, வட்ட, நகர, பேரூர் உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்கி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Anitha Radhakrishnan DMK KN Nehru

இதன் காரணமாக சீனியர்கள் பலரும் கடுமையான அப்செட்டில் இருக்கின்றனர். ஏனென்றால் 70 வயதை கடந்த 13 மாவட்டச் செயலாளர் பதவியை இழக்கின்றனர். கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ரகுபதி, காந்தி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் மாவட்டச் செயலாளராக மீண்டும் பதவி வகிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் சீனியர்கள் மாற்று பதவியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதிலும் அனிதா ராதாகிருஷ்ணன் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை அடைய காய்களை நகர்த்த தொடங்கி இருக்கிறார். திமுக ஆட்சியை இழந்ததில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார். முதல்வர் விஜய்யை விமர்சனம் செய்ததற்காக திமுகவில் முதல் நபராக கைதாகியவர் அனிதா ராதாகிருஷ்ணன் தான்.

அதன் பின்னரும் கூட விஜய்யை விமர்சிப்பதில் அவர் ஆவேசமாக இருந்து வந்தார். இதன் பின்னணியில் தூத்துக்குடி மாவட்டத்தை மொத்தமாக கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதாகவே இருந்தது. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை ஓரம்கட்டும் வகையில் அனிதா ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் இருந்ததாக திமுகவினர் முனுமுனுத்து வந்தனர்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் பணிகளை அனிதா ராதாகிருஷ்ணன் நேரடியாக ஸ்டாலினிடம் கேட்டு பெற்று கொண்டார். திமுகவை இம்முறை இடைத்தேர்தலில் நிச்சயம் வெல்வேன் என்றும் பணிகளை தொடங்கினார். இப்படியான சூழலில் மாவட்டச் செயலாளர் பதவியை இழக்கும் நிலை வந்திருப்பதல், அவர் அப்செட்டில் இருக்கிறார்.

அதனால் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்பார்ப்பதாக தெரிய வந்துள்ளது. கே.என்.நேரு மூலமாக இந்த விஷயத்தை திமுக தலைமைக்கும் தெரியப்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ள நிலையில், அதனை கைப்பற்ற சீனியர் நிர்வாகிகள் மத்தியில் மிகப்பெரிய போட்டியும் நிலவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+